தமது பிரதேசத்தில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க வேண்டாம் என யாழ்ப்பாணம் ஏழாலை மக்கள் சுற்றுச் சூழல் அதிகார சபை பணிப்பாளருக்கு கடித மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். குறித்த கடித்தத்தில் பிரதேசவாசிகள் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தொலைத் தொடர்பு கோபுரம் எமது பிரதேசத்தில் அமைக்க வேண்டாம். ஏழாலை தெற்கு புளியங் கிணற்றடி வீதியில் சனநெருக்கம் அதிகமாக உள்ள இடத்தில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதை நாம் விரும்பவில்லை.
அபிவிருத்தி திட்டங்கள் மக்களை பாதிக்க கூடாது
கோபுரம் அமைக்கும் செயற்பாடானது எமது பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமைக்கப்பட்டு வருகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போது அவை சமூக நலன்களை பாதிக்காதவாறு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதோடு ஒரு சமூகத்தில் இருப்பானது ஆரோக்கியமான சுகாதார வசதிகளிலேயே தங்கியுள்ளது. அப்படி இருக்கும்போது எமது பகுதி மக்களின் சுகாதார நலன்களை பாதிக்கும் வகையில் தூர நோக்கம் இன்றி தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்படுகின்றமை எமது மக்கள் மீது பாதிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மிகுந்த மன வேதனை ஏற்படுத்துகின்றதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அது மட்டுமின்றி எமது பகுதி சன நெருக்கடி கூடிய பகுதியாகும். இங்குள்ள பெரும்பாலானவர்கள் தொற்று நோய்களுக்கான சிகிச்சைகளை பெற்று வருகிறார்கள், அதுமட்டுமல்லாது 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.
100 மீட்டர் தூரத்துக்கு 2 ஆலயங்களும் மக்கள் கூடுகின்ற வர்த்தகநிலையங்களும் காணப்படுவதுடன் இரண்டு பால் பண்ணைகளும் இறைச்சி விற்பனை கடைகளும் அமைந்துள்ளன.
எனவே எமது கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்று தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.