ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவரும் லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட்டுக்கான வீரர்கள் ஏலம் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இன்று புதன்கிழமை (14) பிற்பகல் நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் முதல் தடவையாக வீரர்களுக்கான ஏலம் நடத்தப்படுவதன் மூலம் லங்கா பிறிமியர் லீக் கிரிக்கெட் புதிய அத்தியாயம் படைக்கவுள்ளதாக எல்.பி.எல். போட்டி பணிப்பாளர் சமன்த தொடன்வெல தெரிவித்தார்.
பிரபல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலர் ஏலத்தில் வாங்கப்படவுள்ளனர்.
நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ், தம்புள அவ்ரா, கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ், கண்டி பெல்கன்ஸ், கோல் க்ளடியேட்டர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் மொத்தம் 360 வீரர்களில் அதிசிறந்தவர்களை ஏலத்தில் எடுக்கவுள்ளன.
முதல் மூன்று எல்.பி.எல். அத்தியாயங்களிலும் திசர பெரேரா தலைமையிலான ஜெவ்னா (ஸ்டாலியன்ஸ் பின்னர் கிங்ஸ்) அணி சம்பியனாகியிருந்தது. அந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் அதன் பயிற்றுநராக தில்லின கண்டம்பி செயற்பட்டதுடன், இந்த வருடமும் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர்களும் முதல் தர மற்றும் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடிய வீரர்களே ஏலத்தில் வாங்கப்படவுள்ளனர்.
வீரர்களுக்கான ஏலத்துக்கு 156 வெளிநாட்டு வீரர்களும் 204 உள்ளூர் வீரர்களும் தங்களைப் பதிவு செய்துகொண்டுள்ளனர்.
51 சுற்றுகளைக் கொண்ட எல்.பி.எல். வீரர்களுக்கான ஏலம் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஒவ்வொரு அணியும் 21 வயதுக்குட்பட்ட இலங்கை வீரர் ஒருவரை ஏலத்தின் மூலம் கட்டாயம் தெரிவுசெய்யவேண்டும்.
இந்த ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் தலா 500,000 அமெரிக்க டொலர்களை செலவிடும். இலங்கை நாணயப்படி, சுமார் 15 கோடி ரூபாவாகும். இதில் 85 வீதத்தை ஏலத்துக்கு செலவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரபல தொகுப்பாளர் சாரு ஷர்மா இந்த வருட ஏலத்தை முன்னின்று நடத்துவார்.
நெதன் கூல்டர் நைல், பென் கட்டிங், ஜேசன் பெஹ்ரெண்டோர்வ், கிறிஸ் லின் (அவுஸ்திரேலியா),