பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேர், பழுதடைந்த சோற்றை கொடுத்து புதிய மாணவர்களைப் பகிடிவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இடைநிறுத்தப்பட்ட மாணவர்கள் புதிய மாணவர்களை கடந்த 5ஆம் திகதி விடுதிக்கு அழைத்துச் சென்று பழுதடைந்த சோற்றை ஊட்டச் செய்து அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பகிடிவதைக்கு உள்ளாக்கிய மாணவர்களுக்கான வகுப்புத்தடை நேற்று முன்தினம் (10) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதோடு , முறையான விசாரணை நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்