அநுராதபுரம் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுக்கு மூன்று சிறுவர்கள் சேதம் விளைவித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இக் குற்றச்சாட்டில் அம் மூன்று மாணவர்களும் இன்று (11) காலை கைதுசெய்யப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பரசங்கஸ்வெவ, ஆசிரிகம பிரதேசங்களில் வசிக்கும் 15 மற்றும் 17 வயதுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் சாரதி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.