இலங்கையில் உணவு பாதுகாப்பற்ற நிலையை எதிர்நோக்கும் மக்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, நாட்டில் 75 இலட்சம் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
88 வீதமான மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவில் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள இது தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் இணைந்து அண்மையில் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில மாகாணங்களில் சுமார் 88 வீதமான மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொண்டுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளதுடன் , 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நாட்டில் உணவுப் பாதுகாப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.