அர்ச்சுனா மீதான தாக்குதலை மறுக்கும் சுஜித் சஞ்சய் பெரேரா

சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து தாக்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா (Sujith Sanjaya Perera) தெரிவித்துள்ளார்.

நேற்று (03) இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து பேசுமாறு தன்னை நிர்ப்பந்தித்திருந்த போது தான் அங்கு சென்ற வேளை சுஜித் என்பவர் தன்னைத் தாக்கியதாக இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர் தன் தந்தையின் வயதையுடையவர் என்றும் இல்லையெனில் அவரை அந்த இடத்திலேயே தாக்கி நானே அவருக்கு சிபிஆர் செய்திருக்க வேண்டிய நிலை வந்திருக்கும் என்றும் அர்ச்சுனா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரபல சீரியல் நடிகர் மரணம்!

பிரபல சீரியல் நடிகர் நேத்ரன், கடந்த இரண்டு வருடமாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையைச் சேர்ந்த நடிகர் நேத்ரன், குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சின்னத்திரையில் ஹீரோ முதற்கொண்டு, பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

மேலும் நேத்ரன் தன்னோடு இணைந்து நடித்த நடிகை தீபாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேத்ரனின் மகள்கள் இருவருமே தற்போது திரையுலகில் நடிக்க முயற்சி செய்து வருகின்றனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேத்ரனின் மூத்த மகள் அபிநயா தன்னுடைய தந்தை கேன்சரால் போராடி வருவதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் கல்லீரல் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். கண்டிப்பாக தன்னுடைய தந்தை புற்றுநோயில் இருந்து மீண்டு வருவார் என நப்புகிறோம். அவருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டார்.

அறுவை சிகிச்சைக்கு பின்னர்,  வீட்டில் ஓய்வில் இருந்த நேத்ரன் இன்று மாலை உயிரிழந்துள்ளார். இந்த தகவல் சின்ன சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேத்ரன் கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பொன்னி’ சீரியலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருடைய மனைவி தீபா நேத்ரன், சன் டிவியில் ஒளிபரப்பாகி வேறு சிங்க பெண்ணே சீரியலில் ஹீரோவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  நேத்ரன் மறைவை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

புகலிட கோரிக்கை தொடர்பில் கனடா அரசு எச்சரிக்கை !

கனடாவில் (Canada) இனி புகலிடக் கோரிக்கை பெறுவது என்பது எளிதல்ல என கனேடிய அரசாங்கம் உலகளாவிய எச்சரிக்கை விளம்பரம் ஒன்றை விடுத்துள்ளது.

சுமார் 178,662 அமெரிக்க டொலர்கள் செலவில் தமிழ், இந்தி, உருது, ஸ்பேனிஷ் உட்பட 11 மொழிகளில் இந்த எச்சரிக்கை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்நடவடிக்கை கனேடிய மக்களிடையே செல்வாக்கு குறைந்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அரசாங்கத்தின், அரசியல் தந்திரம் என ஒரு சில தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறித்த விளம்பரத்தில், கனடாவில் இனி புகலிடம் கோருவது எளிதல்ல. தகுதி பெற கடுமையான வழிமுறைகள் உள்ளன. முடிவெடுக்கும் முன்னர் அவை குறித்து நன்கு தெரிந்துகொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாகவே, புலம்பெயர் மக்களுக்கு வாய்ப்புக்களை அதிகம் வழங்கி வரும் கனேடிய அரசாங்கம், தற்போது புலம்பெயர் மக்களை உள்வாங்கும் எண்ணிக்கையை குறைத்துள்ளதுடன் டொனால்ட் ட்ரம்பினால் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு தற்காலிகமாக குடியேறும் மக்களையும் தடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ் சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்களுக்கு அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டால் அது தொடர்பாக முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, 0774653915 என்ற இலக்கத்துக்கு அழைத்து விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்க என்பவரை தொடர்புகொள்ள முடியும்.

அல்லது, ‘021 221 9373’ என்ற இலக்கத்துக்கு அழைத்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்ய முடியும்.

மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய நாடாளுமன்றின் முதலாவது அமர்வில் பணியாற்றும் உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வுக்கான குழுவில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்ட எம்.பிக்களை சபாநாயகர் அசோக ரன்வல நேற்றையயதினம் (03-12-2024) அறிவித்துள்ளார்.

அதன்படி, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 143இன் அடிப்படையில், எம்.பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதலாவது அமர்வுக்கான குழுவில், லக்ச்மன் நிபுன ஆராச்சி, இம்ரான் மஹ்ரூப், ரோகினி குமாரி விஜேரத்ன, சானகியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம், கௌசல்யா ஆரியரத்ன சேன நாணயக்கார, சானக மதுகொட, சஞ்சீவ ரணசிங்க, அரவிந்த செனரத் மற்றும் கிட்ணன் செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களே நாடாளுமன்றில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித்தலைவர் இல்லாத சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற அவைக்கு தலைமை தாங்கவுள்ளனர்.

மீண்டும் அச்சத்தை ஏற்ப்படுத்திய பாபா வங்காவின் கணிப்பு!

சிரியாவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து 3ம் உலகப்போர் வெடிக்கும் என தீர்க்கதரிசியான பாபா வங்கா கணித்துள்ளமை தற்போது உண்மையாக நடந்துவிடுமோ என்ற வகையிலான அச்சப்படும் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.

அந்த வகையில் சிரிய நாட்டு கிளர்ச்சியாளர்கள், அந் நாட்டின் 2வது மிகப் பெரிய நகரமான அலெப்போவை கைப்பற்றியுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

கிளர்ச்சியாளர்களின் முன் நகர்வை தடுத்து நிறுத்த ரஷ்யா வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்திய நிலையிலும் அவர்கள் தலைநகர் டமாஸ்கஸை நோக்கி முன்னேறிவருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இவ்வாறான தகவல்கள் பாபா வங்காவின் கணிப்பு தொடங்கும் காலம் என கருதப்படுகிறது.

சிரியா வீழ்த்தப்பட்டதும் உடனடியாக மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே மிகப்பெரிய போர் ஒன்று தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும், இளவேனிற்காலத்தில், கிழக்கில் ஒரு போர் தொடங்கும். இதைத்தொடர்ந்து, 3ம் உலகப்போர் தொடங்கும், கிழக்கில் நடக்கும் போர், மேற்கை அழிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிரியா வெற்றிபெற்றவரின் காலில் விழும், ஆனால், வெற்றி பெற்றவர் அவராக இருக்கமாட்டார் என்றும் பாபா வங்கா கூறியுள்ளார். எனினும் அதன் பொருள் என்ன என்பது தெரியவில்லை.

இவ்வாறான நிலையில் பாபா வங்காவின் கணிப்பின்படியான நகர்வுகள் மட்டும் ஆரம்பமாகியுள்ளன என்பது மட்டும் நிதர்சனம் என அவரது கணிப்பை பின்பற்றுவோர் தெரிவிக்கின்றனர்

இன்றைய ராசிபலன்கள் 02.12.2024

மேஷம்

சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் இரண்டு மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அதற்காக அலுத்துக் கொள்ளாதீர்கள். அக்கம் – பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

ரிஷபம்

எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.

மிதுனம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்கள் வருகையால் வீடு களைக்கட்டும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஒங்கும். அமோகமான நாள்.

கடகம்

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

சிம்மம்

கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

துலாம்

கணவன் – மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகளை எடுப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். நீண்ட நாள் பிரச்னை தீரும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

விருச்சிகம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. உத்தியோகத்தில் பனிப்போர் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் அதிகாரியுடன் மோதல்கள் வந்து நீங்கும். நிதானம் தேவைப்படும் நாள்.

மகரம்

குடும்பத்தில் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். உற்சாகமான நாள்.

கும்பம்

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.

ஓட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

வாழைச்சேனை – ஓட்டமாவடியில் இடம்பெற்ற ஓட்டோ விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று (03) மாலை ஓட்டமாவடி மீன் சந்தைக்கு முன்பாக வைத்து இடம்பெற்றுள்ளது.

பிரதான வீதியில் பயணித்த இரு ஓட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது .

இந்த விபத்தில் ஓட்டோவில் பயணம் செய்த மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத் தொடர்பில் வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகரிக்கப்பட போகும் அஸ்வெசும கொடுப்பனவுகள்!

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு முறைமை 2023.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2384/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு 2024.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த உத்தேச திட்டத்தின் கீழ் ஆறுதல் (அஸ்வெசும) நலன்புரிப் பயனாளிகள் குடும்பங்கள் 04 வகையான சமூகப் பிரிவின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.

பொருளாதார நெருக்கடிகளின் தாக்கங்கள் முழுமையாக நீங்காமையால், நிலையற்றவர்கள் மற்றும் ஆபத்துக்கு உட்பட்டவர்கள் ஆகிய சமூகப் பிரிவினர்களுக்குரிய முதலாம் சுற்று விண்ணப்பங்களுக்குரிய தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்து சில காலங்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டுமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், சமகால வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொள்ளும் போது தற்போது வழங்கப்படுகின்ற கொடுப்பனவுத் தொகை போதியளவாக இன்மையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தற்போது நடைமுறையிலுள்ள ஆறுதல் (அஸ்வெசும) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு முறைமையைக் கீழ்க்காணும் வகையில் திருத்தம் செய்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நிறுவுவதற்கும்  ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

* வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் சமூகப் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்த நலன்புரிக் கொடுப்பனவுத் தொகை முறையாக 8,500/- ரூபாவை 10,000/- ரூபா வரைக்கும், 15,000/- ரூபாவை 17,500/- ரூபாவாகவும் அதிகரிப்பதற்கும் மற்றும் அதற்கிணங்க திருத்தப்பட்ட ஆறுதல் (அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு உத்தேச திட்டத்தை பாராளுமன்றம் அங்கீகரிக்கின்ற நாள் தொடக்கம் நடைமுறைப்படுத்தல்

* நிலையற்றவர்கள் எனும் சமூகப் பிரிவினருக்கான நலன்புரிக் கொடுப்பனவு செலுத்தப்படும் காலப்பகுதியை 2025.03.31 வரைக்கும் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்

* ஆபத்துக்கு உட்பட்ட சமூகப் பிரிவினருக்காக கொடுப்பனவுக் காலத்தை 2025.12.31 வரைக்கும் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்.

பாராளுமன்றில் தாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!

பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர்  தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தனக்கான நேர ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசாரிக்க சென்ற போது இவ்வாறு தன்னை தாக்கியதாக அவர் முறையிட்டுள்ளார்.

‘ இன்று 2.30 மணியளவில் நான் எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்குச் சென்றேன். இதன்போது நான் கேட்டேன். இந்த நேர ஒதுக்கீடு எவ்வாறு இடம்பெறுகிறது என்று. இன்றைய நாள் எனக்கு எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. நாளை எனக்கான நேரம் இருக்கிறதா? இல்லையா? என கேட்க சென்றேன். அங்கே அதிகாரிகள் இருந்தனர். மற்றைய அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்கள்.  நாளை பிற்பகல் எனக்கு நேரம் ஒதுக்கித் தருவதாக அவர்கள் எனக்கு கூறினார்கள். இந்த வரிசையை எப்படி செய்கிறீர்கள் என நான் கேட்டேன். பின்னர் சுஜித் என்ற நபரிடமும் மற்றொரு நபரிடம் சென்று பேச சொன்னார்கள். அவர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்றனர். அவர்கள் நினைந்தவாறு தீர்மானிக்க முடியாது. கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறினேன். இதன்போது சுஜித் என்ற நபர் என்னை தாக்கினார். என்னை தாக்க முடியாது. இவருக்கு என் தந்தையின் வயது. இவரை தாக்கி நானே சீபிஆர் செய்ய வேண்டி வரும். அதனால் தாக்கவில்லை.’