நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட இருக்கும் ஜப்பானிய வாகனங்கள்

இலங்கைக்கு ஜப்பானிய வாகனங்களை இறக்குமதி செய்வது மீண்டும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜப்பானிய கார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையிலுள்ள கார் இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடலின் போது இது தொடர்பில் சாதகமான உடன்பாடுகள் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கையின் வாகன இறக்குமதியாளர்கள் பல தடவைகள் இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் உரிய பதில் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய ராசிபலன்25.05.2023

மேஷ ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளால் பெருமை உண்டு. உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். மாலையில் நண்பர்களிடமிருந்து கிடைக்கும் தகவல் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். இன்று நரசிம்மரை வழிபட நலன்கள் அதிகரிக்கும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷப ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளை அனுசரித் துச் செல்லவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும். இன்று விநாயகரை வழிபடுவதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது மிக அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படு வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையக் கூடும். சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று அம்பிகையை வழிபட காரியத் தடைகள் விலகும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

கடக ராசி அன்பர்களே!

சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தை யிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வெளியூரில் இருக்கும் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக் கும். ஆனால், பணியாளர் களால் சில பிரச்னைகள் ஏற்படும். மகாவிஷ்ணுவை வழிபட நல்லதொரு திருப்பம் ஏற்படும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும்.

சிம்ம ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். உறவினர்கள் உதவியுடன் சுபநிகழ்ச்சிக் கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். இன்று முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்று குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் நீண்டநாள்களாகக் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர் களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். இன்று சிவபெருமானை வழிபட மனதில் தெளிவு பிறக்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.

துலா ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறை முகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று வேங்கடேச பெருமாளை வழிபட சிரமங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கடன்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

சாதிக்கும் நாளாக அமையும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். கல்லூரிக் கால நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். இன்று லட்சுமி நரசிம்மரை வழிபட இடையூறுகளைத் தவிர்த்துவிடலாம்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னை கள் ஏற்படக்கூடும். இன்று அம்பிகையை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.

மீன ராசி அன்பர்களே!

எடுத்த காரியம் அனுகூலமாகும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள் ளது. உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். இன்று ஆஞ்சநேயரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

ஆசிரிய பயிலுனர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!

பரீட்சைகளில் சித்தியடையாத ஆசிரிய பயிலுனர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

அதன்படி ஆசிரிய நியமனத்திற்காக தேசிய கல்வியற் கல்லூரிகளில் நடத்தப்பட்ட பரீட்சைகளில் சித்தியடையாத ஆசிரிய பயிலுனர்களுக்கு மீண்டும் அந்த பரீட்சையில் தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேலுகுமாரின் கேள்வி

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சியினை நிறைவு செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் சித்தியடையாமல் இருப்பதால், அவர்கள் மீண்டும் தோற்றுவதற்கு இன்னும் ஒருவருடம் செல்லும் நிலை இருப்பதாக இன்றைய (24.05.2023) நாடாளுமன்ற அமர்வின் போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதற்கான ஏதேனும் வேலைத்திட்டம் உள்ளதா? என அவர் கல்வி அமைச்சரிடம் வினவியுள்ளார்.

கல்வி அமைச்சரின் பதில்

இதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுகையில், தேசிய கல்வியற் கல்லூரியில் 7800 பேர் பயிற்சியை நிறைவு செய்து நியமனத்தை எதிர்ப்பார்த்துள்ளனர்.

அவர்களில் 350 பேர் குறித்த பரீட்சையில் சித்தியடையாதுள்ளனர். எனவே, முதல் கட்டமாக 7500 பேருக்கு நியமனத்தை வழங்கியதன் பின்னர், எஞ்சிய 350 பேருக்கும் மீளவும் அந்த பரீட்சைக்கு தோற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.

அந்த பரீட்சையை காலம் தாழ்த்தாது எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார். 

இலங்கை வரும் சீனர்களுக்கான முக்கிய செய்தி!

இலங்கைக்கு பயணிக்கும் சீன பிரஜைகளை இலங்கையின் சடடதிட்டங்களைப் பின்பற்றுமாறு கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிவித்தல் விடுத்துள்ளது.

இந்நிலையில் கல்வி, வியாபாராம், தொழில் மற்றும் சுற்றுலா என பல்வேறு தேவைகளின் நிமித்தம் சீனாவிலிருந்து இலங்கை்கு வரும் சீன பிரஜைகள் அனைவரும் இலங்கையின் சட்டதிட்டங்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டுமெனவும் இலங்கையின் மதம் மற்றும் கலாச்சாரங்களுக்கு மதிப்பளித்து செயற்பட வெண்டுமெனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அதன்படி அண்மையில் சீன பிரஜை ஒருவர் சட்டவிரோதமாக இலங்கைக்கு வரமுயன்ற சம்பவத்தையடுத்து குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.  

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி இன்றைய தினம் (24) டொலரின் கொள்வனவு விலை 297.98 ரூபாவாகவும் விற்பனை விலை 311.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

14 வயதான சிறுவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 18 வயதான இளைஞன் கைது!

பாடசாலைக்குச் செல்லும் 14 வயதான சிறுவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் பாடசாலை மாணவனான 18 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.

அத்தோடு இந்த சம்பவம் மொனராகலை வெதிகும்புர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன்

பாதிக்கப்பட்ட மாணவன் தனது சித்தப்பாவின் வீட்டிற்க்கு வந்தபோது சந்தேகநபர் தன்னுடைய அறையில் வைத்தும் தந்தையின் அறையில் வைத்தும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபரும் பாதிக்கப்பட்ட நபரும் உறவினர்கள் என்பதுடன் 2023 பெப்ரவரி மாதம் முதல் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை யாரிடமும் சொல்லவேண்டாம் என்றும் சந்தேகநபர் அச்சுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஒருநாள் சம்பவத்தை நேரில் கண்டு சந்தேகநபரை தாக்கியதுடன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதனையடுத்தே சந்தேகநபரை கைது செய்த பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுவனை வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்ததுடன், அதில் பயணித்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவர்கள்

புத்தளம் பகுதியில் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்கள் குறித்த பாடசாலையில் உடற்கல்வி கற்பிக்கும் ஆசிரியரை சரமாரியாக தாக்கி காயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அத்தோடு சம்பத்துடன் தொடர்புடைய மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் செய்த செயல்

புத்தளம் – தில்லையடி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலை முடிவடைந்த உடன் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்களை கிழித்து பாதையில் வீசியுள்ளனர்.

இதனையடுத்து புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியராக கல்வி கற்பிக்கும் எச்.எம் அஸ்கி என்ற ஆசிரியரை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களில் சிலர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தில்லையடி பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கப்பட்டதன் பின்னர் ஆசிரியரின் வீட்டின் நுழைவாயிலுக்கு கற்களினால் வீசியுள்ளனர்.

இதனையடுத்து ஆசிரியர் வெளியில் வந்து குறித்த இடத்தை விட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார்.

இதன்போது மாணவர்கள் கற்களை கையில் பொத்தி வைத்த நிலையில் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர். காயங்களுக்கு உள்ளான உடற்கல்வி ஆசிரியர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது ஆசிரியரைத் தாக்கிய சில மாணவர்களில் 4 பேர் நேற்று இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் இதனையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய ஏனைய மாணவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

யாழில் டிக்டொக் செயலில் இயங்கிக் கொண்டிருக்கும் பெண்ணால் உயிரை மாய்த்துக் கொண்ட வெளிநாட்டு நபர்

டிக்டொக் செயலில் இயங்கிகொண்டிருக்கும் யாழ்ப்பாண பெண் ஒருவரால் சுவிஸில் உள்ள நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டுக்கு சென்று தன் உயிரை மாய்ந்துகொண்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ் நாட்டில் இருந்து இளைஞரொருவர் தனது தந்தைக்கு நடந்த சம்பவம் தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்து இவ்வாறான ஒரு சம்பவம் இனி யாருக்கும் நடக்க கூடாது எங்களின் விபரங்களை வெளியிட வேண்டாம் ஆனால் இந்த பிரச்சனையை வெளி உலகிற்கு தெரியப்படுத்துங்கள் என கேட்டுகொண்டுள்ளார்.

அதன்படி அப்படி என்னதான் நடந்து என்பது தொடர்பான பார்க்கலாம்,

எனது தந்தைக்கு வயது 60 அவர் அடிக்கடி டிக் டாக்கில் இயங்கிகொண்டிருந்தார், நீண்ட காலமாக அவர் யாருடனும் சரியாக பேசவும் இல்லை பழகவும் இல்லை தன்னிச்சையாகவே சிந்தித்து கொண்டிருந்தாக மகன் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து சுவிஸில் இருந்து ஜேர்மன் நாட்டுக்கு சுற்றுலா சென்றிந்தார், அங்கு சென்றிருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உயிரை மாய்ந்துக்கொண்டுள்ளதாக செய்தி எங்களுக்கு கிடைத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஜேர்மன் நாட்டுக்கு சென்று அவரின் இறுதி கிரியைகளை செய்தாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் எங்களுக்கு ஒரு சிந்தனையாக இருந்தது அப்படியென குறையை எங்கள் தந்தைக்கு செய்யாமல் விட்டுவிட்டோம். எங்களது தந்தை யாழ்ப்பாணத்தில் இருந்து சிறு வயதிலேயே சுவிஸிற்கு இடம்பெயர்ந்து வந்து உழைத்து எங்களை ஆளாகியிருக்கிறார்.

அப்படியிருக்கையில் எங்களை அறியாமல் நாங்கள் எதாவது அவருக்கு குறை வைத்தோமா என சிந்தித்துக் கொண்டிருந்த வேளை தந்தையின் நண்பர் மூலம் அவரின் டிக் டாக்க்கை தீடிரென பரிசோதனை செய்தபோது அதில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போதுதான் ஒரு அதிர்ச்சிக்கரமான உண்மை தெரியவந்துள்ளது.

எனது தந்தைக்கும் அதேவேளை யாழ்ப்பாணத்தில் டிக் டொக்கை பயன்படுத்திக்கொண்டிருந்த யுவதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தனது தந்தையோடு குறித்த யுவதி அபாசமாக பேசியுள்ளார்.

பின்னர் தந்தையிடம் அதனை காட்டி காட்டி குறித்த யுவதி பணத்தை வாங்கிவந்துள்ளார், மேலும் தொடர்ந்து இவ்வாறு பணத்தை கேட்டு வற்புறுத்திய நிலையில் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து ஜேர்மன் நாட்டிற்கு சென்று தந்தை உயிரை மாய்ந்துகொண்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவங்கள் எல்லாம் எங்களுக்கு தெரியக்கூடாது என்று தனது நண்பரிடம் அவர் தெரிவித்திருக்கின்றார்.