நீர்தேக்க கால்வாயில் தவறி வீழ்ந்த குழந்தை உயிரிழப்பு!

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் பிரதான நீர்ப்பாசன கால்வாயில் தவறி விழுந்து ஒரு வருடமும் 8 மாத குழந்தையும் உயிரிழந்துள்ளது.

தம்புத்தேகம ராஜாங்கனை யாய 04 பகுதியில் நேற்று (27) நீர்ப்பாசன கால்வாயில் குழந்தை தவறி விழுந்துள்ளது.

தம்புத்தேகம, மலியதேவபுர பகுதியைச் சேர்ந்த குழந்தையே உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்படமையால் பரபரப்பு!

யாழ்ப்பாணம் பகுதியொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சடலம் இன்றைய தினம் (28-05-2023) பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவில் மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த 33 வயதான தியாகராசா சந்திரதாஸ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் காதல் ஜோடிகள் சல்லாபிக்கும் காட்சிகள்

கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் காதல் ஜோடிகள் சல்லாபிக்கும் அதிர்ச்சிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

நீச்சல் தடாகத்தில் காதல் ஜோடிகள் உல்லாசமாக இருக்க அனுமதித்தது யார் என கேள்வியெழுப்பியுள்ள சமூக ஊடக பயனர்கள் இது குறித்து உரிய நடவடிக்கையெடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் டெங்கு காய்ச்சலில் இருந்து தம்மை பாதுகாப்பு கொள்ள உடலை மறைக்கும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் உள்ள 3568 பரீட்சை மத்திய நிலையங்களுக்குமான வினாத்தாள்கள் விநியோகிக்கும் நடவடிக்கை இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்காக 40 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

விசேட தேவையுள்ள மாணவர்களுக்காக இரத்மலானை, தங்காலை ஆகிய பகுதிகளில் இரண்டு விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

மேலும், சிறைக் கைதிகளுக்காக பரீட்சை மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களுக்காக விசேட பரீட்சை மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நாளை (29.05.2023) முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

குறித்த பரீட்சையில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 3 லட்சத்து 94 ஆயிரத்து 450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பரீட்சார்த்திகளின் போக்குவரத்து வசதிகளுக்காக மாணவர்களுக்கான பேருந்து சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.  

சீனாவில் ஓட்டுனர் இல்லாத கார் அறிமுகம்

தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள குய்யாங் நகரில் நடைபெற்றுவரும் சர்வதேச பிக் டேட்டா இண்டஸ்ட்ரி எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓட்டுநர் இல்லாத கார் பார்வையாளர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் விசாலமான கேபின் உள்ள இந்த கார், ஸ்டீயரிங் மற்றும் ஓட்டுநர் இருக்கை இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரில் 4 லேசர் ரேடார்கள், 7 கேமராக்கள் மற்றும் 12 மில்லிமீட்டர்-அலை ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. 3 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் சிறிய ரோந்து கார்கள் தவிர, 3டி பிரிண்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

பட்டம் பெற சென்ற மாணவியுடன் சென்ற நாய்க்கும் பட்டம் வழங்கி வைப்பு!

அமெரிக்காவின் நியூஜெர்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணுடன் தொடர்ந்து வகுப்பறைக்கு சென்று வந்த வளர்ப்பு நாய்க்கு பட்டமளிப்பு விழாவில் டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது.

கிரேஸ் மரியானி என்ற பெண்ணின் வளர்ப்பு நாயான ஜஸ்டின், ஒவ்வொரு முறையும் தவறாமல் கிரேசுடன் வகுப்பறைக்கு சென்றுள்ளது.

இதை பாராட்டும் விதமாக வளர்ப்பு நாய் ஜஸ்டினுக்கு சீட்டன் ஹால் பல்கலைக்கழகம் டிப்ளமோ வழங்கி கௌரவித்தது.

பட்டத்தை நாய் தனது வாயால் கவ்வி வாங்கியபோது, அங்கிருந்த பார்வையாளர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கைத்தட்டினர். 

யாழ் கொடிகாமம் பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஆறு வயது சிறுமி

கொடிகாமம், மிருசுவிலில் 6 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

ரி.கின்சிகா என்ற சிறுமியே இவ்வாறு வீட்டு கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை நேற்று மாலை 3 மணி முதல் காணவில்லையென தேடியபோது, 4 மணியளவில் கிணற்றுக்குள் விழுந்திருந்தது கண்டறிப்பட்டுள்ளது.

மேலும் அச் சிறுமியை உடனடியாக மீட்டு கொடிகாமம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை வெறுத்து விரக்தியில் தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை காப்பாறிய பொலிசார்!

தனது வாழ்க்கையே வெறுத்து விரக்கதியின் உச்ச கட்டத்தில் வெலிகம நகரில் தற்கொலை செய்து கொள்வதற்காக அலைந்து கொண்டிருந்த யுவதியின் உயிரைக் காப்பாற்றி அவரின் மனதை தெளிவுபடுத்தி வேலையில் ஈடுபடுத்தும் உன்னத செயலில் ஈடுபட்ட காவல்துறையினரின் செயற்பாடு தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

வெலிகம காவல்துறையினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த யுவதி நேற்று (26) காலை வெலிகம நகரில் தனது கணவர் தன்னை கவனிக்காததால் வாழ பொருளாதார வசதி இல்லை எனக் கூறி தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காக சுற்றித் திரிந்துள்ளார். 

இது தொடர்பில் வெலிகம பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

வெலிகம பொலிஸார் அவசர அழைப்புப் பிரிவின் சாந்த மற்றும் விக்ரமாராச்சி ஆகிய இரு உத்தியோகத்தர்களினால் குறித்த இளம் பெண் வெலிகம பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

விசாரணையில் தெரிய வந்தவை  

விபத்து தொடர்பான விசாரணையின் போது ​​கணவன் இவரைக் கவனிப்பதில்லை என்பதும், வாழ்வதற்குத் தேவையான பொருளாதாரப் பின்னணியும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் தனது உயிருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் அஹங்கம பிரதேசத்தில் இருந்து வெலிகம நகருக்கு வந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அவர் தனது ஒரே குழந்தையை வீட்டில் விட்டு சென்றது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையின் பின்னர் வெலிகம தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி. எம்.அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகள் குழு, குறித்த இளம் பெண்ணின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளில் பலம் கொடுக்க தீர்மானித்துள்ளனர்.

அதன் பிரகாரம் வெலிகம காவல்துறையினர் அவர் வேலைக்கு செல்லவும், தங்குமிடத்திற்கு தேவையான பணத்தை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

பின்னர் அந்த பெண் வெலிகம காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அவரை கண்காணிக்கவும் பொலிஸார் முடிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய ராசிபலன்28.05.2023

மேஷ ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் இழுபறியாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. வீட்டில் சிறுசிறு மராமத்துப் பணிகளை மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். இன்று விநாயகரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்று மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம். இளைய சகோதரர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதர வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

உற்சாகமாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள்.நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். தேவையான அளவுக்கு பணம் இருப்பதால் செலவுகளை சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. பிற்பகலுக்குமேல் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். இன்று மகாவிஷ்ணு வழிபாடு நற்பலன்கள் தரும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவைக்காக செலவு செய்யவேண்டி வரும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கடக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். அவ்வப்போது மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பம் தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் குடும்பப் பெரியவரின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். துர்கையை வழிபட சிரமங்கள் குறையும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே!

அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். காரியங்களில் பொறுமை மிக அவசி யம். அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு கரையும். சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை யும் ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் எப்போதும்போல் இருந்தாலும் பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். இன்று முருகப்பெருமானை வழிபட காரிய அனுகூலம் உண்டாகும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு ஏற்படும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பெரியவர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

செலவுகள் அதிகரிக்கும் நாள். தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாப மும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். ஆஞ்சநேயரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது அவசியம்

துலா ராசி அன்பர்களே!

தந்தையால் ஆதாயம் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரி யம் அனுகூலமாக முடியும். தந்தைவழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாகும். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். மனஇறுக் கம் நீங்கி நிம்மதி உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள். இன்று லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நன்று.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் பிற்பகலுக்குமேல் ஈடுபடவும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கக்கூடும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

பதற்றம் இல்லாமல் செயல்படவேண்டிய நாள். தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவருடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் வழக்கம்போல நடை பெறும். பணியாளர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் செலவுகள் ஏற்படும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலைச்சலுடன் கூடிய ஆதாயம் கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். அவ்வப்போது சோர்வு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே மூன்றாவது நபர்களின் தலையீட்டைக் கண்டிப் பாகத் தவிர்த்துவிடவும். உறவினர்களின் வருகையால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவர் களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். அம்பிகை வழிபாடு அல்லல் தீர்க்கும்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.

மகர ராசி அன்பர்களே!

மனதில் அவ்வப்போது சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொறுமை அவசியம். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பைரவர் வழிபாடு நலம் சேர்க்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்தவும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

கும்பராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து வரும். சகோதரர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற் சிகள் சாதகமாகும். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகளை முறியடிப்பீர்கள். துர்கை வழிபாடு நலம் சேர்க்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.

மீன ராசி அன்பர்களே!

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது. பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபா ரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

இலங்கையின் முன்னாள் இராஜதந்திர அதிகாரி ஜயந்த தனபால உடல் நலக் குறைவால் காலமானார்!

  இலங்கையின் முன்னாள் இராஜதந்திர அதிகாரி ஜயந்த தனபால உடல்நலக்குறைவால் 85 ஆவது வயதில் காலமானார்.

கண்டி வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுவந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜயந்த தனபால, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இராஜதந்திர அதிகாரியாகப் பணியாற்றியதோடு, ஜெனீவாவில் இலங்கையின் தூதுவராகவும் பணியாற்றினார்.

மேவேளை ஜயந்த தனபால 1998-2003 க்கு இடையில் ஐக்கிய நாடுகளின் ஆயுதக் குறைப்பு விவகாரங்களுக்கான அலுவலகத்தின் துணைச் செயலாளராகவும் பணியாற்றி இருந்தார்.