புதிய உலக சாதனை படைத்த இலங்கை மாணவன்

 இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை நீந்தி இலங்கைத் தமிழ் மாணவர் ஒருவர் புதிய உலக சாதனையை  நேற்று 28ஆம் திகதி நிகழ்த்தியுள்ளார்.

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் மாணவரான தேவேந்திரன் மதுஷிகன் ஜனாதிபதி சாரணரும் ஆவார்.

 புதிய உலக சாதனை

பாக்கு நீரிணை வழியாக 30 கிலோமீட்டர் தூரத்தை 14 மணி நேரத்தில் நீந்தி பள்ளி மாணவன் என்ற வகையில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

தனுஸ்கோடியில் இருந்து அதிகாலையில் ஒரு மணிக்கு நீந்தத் தொடங்கிய மாணவன் பிற்பகல் 3-05 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.

இந்நிகழ்வில் மன்னார் மற்றும் மட்டக்களப்பு மாகாணங்களின் ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.  

யாழில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பயணித்து கொண்டிருந்த நபர் மீது பின்னால் வந்த வாகனம் அவரது மோட்டார் சைக்கிளை தட்டியுள்ளார்.

இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் பின்னால் வேகமாக வந்த லொறியின் சக்கரம் அவரது தலைக்கு மேல் ஏறியதில் தலை சிதைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் இருந்து கதிர்காமக யாத்திரைக்கு சென்ற நபர் சடலமாக மீட்பு!

 யாழ்ப்பாணம்  சந்நதி முருகன் ஆலயத்தில்  இருந்து  கதிர்காமத்திற்கு பாதயாத்தரை மேற்கொண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலையத்தை வந்தடைந்த ஒருவர் இன்று (29) ஆலையத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில்  யாழ்ப்பாணம் கைதடி மத்திய வீதியைச் சேர்ந்த 74 வயதுடைய இராசையா சிவலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திடீர் உயிரிழப்பு
கடந்த 6ம் திகதி கதிர்காமத்துக்கான பாதயாத்திரை யாழ் சந்நதி முருகன் ஆரலயத்தில் ஆரம்பித்த பாதையாத்திரை குழுவில் பங்கேற்று ஞாயிற்றுக்கிழமை (28) திகதி இரவு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலையத்தை வந்தடைந்து ஆலைய வளாகத்தில் தங்கியிருந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த நபர் இன்று காலையில் பணிஸ் உண்ட பின்னார் அமர்ந்திருந்த நிலையில் திடீரென நிலத்தில் சரிந்து வீழ்ந்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டு தவைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அடையாளம் தெரியாத நபர்களால் அடித்துடைக்கப்பட்ட புத்தர் சிலை!

  இமதுவ – அகுலுகஹா கல்குவாரிக்கு அருகில் கட்டப்பட்டுள்ள புத்தர் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியிலுள்ள மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

புத்தர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கண்ணாடியை உடைத்து புத்தர் சிலையை உடைத்தவர்கள் பற்றிய தகவல் இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.  

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பரீட்சை காலத்தில் நடமாடும் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் விசேட மோட்டார் சைக்கிள் ரோந்து நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதேவேளை பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்கள் மற்றும் விடைத்தாள் சேகரிப்பு நிலையங்களின் பாதுகாப்பிற்காக 1707 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் தேர்வு மையங்கள் அமைந்திருந்தால் தேர்வுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

யாழில் மரண செய்தி கூற சென்றவருக்கு நிகழ்ந்த சோகம்!

  யாழில் உறவினர் ஒருவரின் மரண செய்தியை மற்றொரு உறவினருக்கு சொல்ல சென்றிருந்த முதியவர் ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் யாழ் நுணாவில் பகுதியை சேர்ந்த கந்தசாமி கமலநாதன் (வயது 74) என்பவரே உயிரிழந்துள்ளார்.

 கார் மோதி பலி

சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தனது உறவினரை சனிக்கிழமை (27) பார்வையிட சென்றபோது , சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த தகவலை உறவினர்களுக்கு தெரிவிப்பதற்காக வைத்தியசாலையில் இருந்து , தனது துவிச்சக்கர வண்டியில் விரைந்துள்ளார்.

இதன்போது , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் பயணித்த கார் மோதி சம்பவ இடத்திலையே தகவல் சொல்ல சென்றவர்  உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில்  கார் சாரதியை கைது செய்த   சாவகச்சேரி பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

இன்றைய ராசிபலன்29.05.2023

மேஷ ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் இழுபறியாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. வீட்டில் சிறுசிறு மராமத்துப் பணிகளை மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். இன்று விநாயகரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்று மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம். இளைய சகோதரர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதர வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

உற்சாகமாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள்.நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். தேவையான அளவுக்கு பணம் இருப்பதால் செலவுகளை சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. பிற்பகலுக்குமேல் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். இன்று மகாவிஷ்ணு வழிபாடு நற்பலன்கள் தரும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவைக்காக செலவு செய்யவேண்டி வரும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கடக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். அவ்வப்போது மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பம் தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் குடும்பப் பெரியவரின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். துர்கையை வழிபட சிரமங்கள் குறையும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே!

அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். காரியங்களில் பொறுமை மிக அவசி யம். அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு கரையும். சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை யும் ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் எப்போதும்போல் இருந்தாலும் பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். இன்று முருகப்பெருமானை வழிபட காரிய அனுகூலம் உண்டாகும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு ஏற்படும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பெரியவர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

செலவுகள் அதிகரிக்கும் நாள். தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாப மும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். ஆஞ்சநேயரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது அவசியம்

துலா ராசி அன்பர்களே!

தந்தையால் ஆதாயம் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரி யம் அனுகூலமாக முடியும். தந்தைவழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாகும். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். மனஇறுக் கம் நீங்கி நிம்மதி உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள். இன்று லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நன்று.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் பிற்பகலுக்குமேல் ஈடுபடவும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கக்கூடும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

பதற்றம் இல்லாமல் செயல்படவேண்டிய நாள். தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவருடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் வழக்கம்போல நடை பெறும். பணியாளர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் செலவுகள் ஏற்படும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலைச்சலுடன் கூடிய ஆதாயம் கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். அவ்வப்போது சோர்வு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே மூன்றாவது நபர்களின் தலையீட்டைக் கண்டிப் பாகத் தவிர்த்துவிடவும். உறவினர்களின் வருகையால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவர் களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். அம்பிகை வழிபாடு அல்லல் தீர்க்கும்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.

மகர ராசி அன்பர்களே!

மனதில் அவ்வப்போது சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொறுமை அவசியம். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பைரவர் வழிபாடு நலம் சேர்க்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்தவும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

கும்பராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து வரும். சகோதரர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற் சிகள் சாதகமாகும். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகளை முறியடிப்பீர்கள். துர்கை வழிபாடு நலம் சேர்க்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.

மீன ராசி அன்பர்களே!

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது. பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபா ரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

யாழ் நைனாதீவு அம்மன் சிலைக்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடி மீது கல் வீசியவருக்கு நேர்ந்த கதி!

யாழ். பண்ணை நாகபூசணி அம்மன் சிலைக்கு அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் சோதனை சாவடி மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்ணை பகுதியில் பொலிஸாரின் காவலரன் உள்ள கூடாரத்தின் கண்ணாடிகள் மீது நேற்றிரவு (27-05-2023) இனம் தெரியாத நபரொருவர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு, கண்ணாடிகளை உடைத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தான் மது போதையிலையே கல் வீசினேன் என தெரிவித்துள்ளார்.

அந்நபரை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

கனடா பல்கலைக்கழகமொன்றில் ரத்து செய்யப்படும் கட்டணங்கள்

 கனடாவின் பல்கலைக்கழகமொன்று மாணவர்களின் வகுப்பு கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

ஒன்றாரியோவின் வாட்டர்லூ பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் வகுப்புக் கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் காணப்படும் இரண்டு பூர்வகுடியின மக்கள் சமூகத்தைச் பிரதிநிதித்துவம் செய்யும் மாணவர் சமூகத்திற்கு இந்த சலுகை வழங்கப்படுகின்றது.

மிஸ்ஸிசாகாவின் கிரெடிட பழங்குடியின மக்கள் மற்றும் பழங்குடியின பகுதியின் சிக்ஸ் நேஷன் பழங்குடியின மக்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இவ்வாறு சட்டண வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு நேர அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் பட்டமொன்றை தொடரக்கூடிய தகுதியுடைய மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட உள்ளது.

மாணவர்களுக்கு வகுப்பு கட்டணங்கள் ரத்து செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

கனடாவிற்கு உறவினர்களை அழைக்க இருபவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

 கனடாவிற்கு உறவினர்களை அழைத்து வருவதற்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குடியேறிகள் தங்களது வாழ்க்கைத்துணை, பெற்றோர் மற்றும் பிள்ளைகளை விரைவில் அழைத்து வருவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நிரந்தர வதிவிட உரிமை கோர விரும்பும் குடியேறிகளின் குடும்ப உறுப்பினர்கள் முதலில் விசிட்டர் வீசா மூலம் விண்ப்பம் செய்ய முடியும் என கனடாவின் குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் தெரிவித்துள்ளார்.

மனுதாரரின் விண்ணப்பம் பரிசீலனை செய்யும் வரையில் அவர் உறவினர்களுடன் தங்கியிருக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் விண்ணப்பதாரிகள் நாடு திரும்ப விரும்பமாட்டார்கள் என்ற காரணத்தினால் இந்த வகை விசிட்டர் வீசா வழங்கப்படுவது குறைவாகவே காணப்பட்டது.

புதிய முறையில் நிரந்தர வதிவிட உரிமை கோரும் விண்ணப்பதாரிகள் குறித்த தகவல்களை பரிசீலனை செய்து துரித கதியில் வீசா வழங்கப்பட உள்ளது.

விதிவிட வீசா கிடைக்கக் கூடிய சாத்தியமுடையவர்களுக்கு துரித கதியில் தற்காலிக வீசா வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.