யாழில் மோசடியில் ஈடுபட்ட வியாபாரிகள்

அச்சுவேலியில் உள்ள பல வியாபார மையங்களில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்கள் திடீர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

குறித்த திடீர் பரிசோதனை நடவடிக்கை இன்றைய தினம் (29-05-2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, வியாபாரிகளினால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த போது அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்படாத மற்றும் நடப்பாண்டில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய ஐந்து வியாபாரிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், எதிர்வரும் காலங்களில் நிறுவை அல்லது அளவை, நிறுக்கும் அல்லது அளக்கும் உபகரணங்களை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தும் வியாபார நிலையங்களையும் திடீர் பரிசோதனை மேற்கொள்ள படுவுள்ளது.  

இன்றைய ராசிபலன்30.05.2023

மேஷ ராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். வெளியிடங்களில் உணவு உண்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகள் ஆலோசனை கேட்டு வருவார்கள். முருகப்பெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரிஷப ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத் துணையால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். ஆனால், முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்கள் விடுப்பில் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்தும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். உடல் ஆரோக் கியம் மேம்படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்களால் சில பிரச் னைகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைப்பதுடன், புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகமும் கிடைக்கும். துர்கையை வழிபட முயற்சி வெற்றி பெறும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு உறவினர்கள் வகையில் எதிர் பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சகோ தரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு வீட்டில் தெய்வவழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்ப டும். பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் வீண் விவா தம் செய்வதைத் தவிர்க்கவும். சிவவழிபாடு காரியங்களை அனுகூலமாக்கும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பணியா ளர்களால் செலவுகள் ஏற்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி அன்பர்களே!

அதிகரிக்கும் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். குடும்பத்தில் மூன்றாவது நபர்களின் தலையீடை அனுமதிக்கவேண்டாம். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும். சகோதர வகையில் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதலாக உழைக்கவேண்டி வரும். ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் மனஅமைதி உண்டாகும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

துலா ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு ஏற்ற நாள். சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் செலவும் உண்டாகும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வழக்கத்தை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். இன்று அம்பிகையை வழிபட நன்மைகள் கூடும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். உறவினர்கள் வகையில் புதிய ஆடை, ஆபரணங் களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்க் கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்..விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதால், சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும். பேசும் வார்த்தைகளில் நிதானம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். இன்று ஶ்ரீ ராகவேந்திரரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

மகர ராசி அன்பர்களே!

முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் மிகுந்த கவனத்துடன் ஈடுபடவும். மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். எதிர் பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். வீண்செலவுகளுக் கும் வாய்ப்பு உள்ளது. விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் சங்கடங்கள் குறையும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பின்னர் முடிந்துவிடும். தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். புதிய முதலீடுகளைத் தவிர்க் கவும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

மீன ராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கண வன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிக்கு வாழ்க்கைத் துணை யின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

உடற் தொப்பையை குறைக்க வேண்டுமா?இதனை மட்டும் செய்து பாருங்கள்

உலகளவில் சுமார் 2 மில்லியன் மக்கள் உடல் பருமன் அல்லது தொப்பையால் அவதிப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உடல் எடை அதிகரித்தாலோ அல்லது தொப்பை வர ஆரம்பித்தாலோ உடனே அதை குறைக்க மற்றும் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

ஏற்படும் ஆபத்து

சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்றவற்றின் அபாயத்தை அதிகரித்துவிடும். உடல் பருமன் அல்லது தொப்பையால் அவதிப்படுபவரானால் கோடைக்காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏனெனில் மற்ற காலங்களை விட கோடையில் உடல் எடை சற்று வேகமாக குறையும். அதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க வெறும் உடற்பயிற்சிகள் மட்டும் உதவாது. உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் பானங்களும் பெரிதும் உதவி புரியும்.

கோடையில் உடல் சூடு அதிகமாகும் வாய்ப்புள்ளதால் அந்த உடல் சூட்டைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், பானை போன்று வீங்கியுள்ள தொப்பையைக் குறைக்கவும் உதவும் 3 அற்புதமான பானங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த பானங்களை காலையில் வெறும் வயிற்றி குடித்தால் தொப்பையை வேகமாக குறைக்கலாம்.

எலுமிச்சை மற்றும் இஞ்சி நீர்

எலுமிச்சை மற்றும் இஞ்சி உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றுவதில் சிறந்தவை. இந்த இரண்டையும் கொண்டு தயாரிக்கும் பானம் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைத்து, தொப்பையை வேகமாக குறைக்க உதவி புரியும்.

அதற்கு 2 எலுமிச்சை எடுத்து, அவற்றில் இருந்து சாற்றினைப் பிழிந்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் எலுமிச்சையின் தோசை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் 1 லிட்டர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் 1 இன்ச் இஞ்சியைத் தட்டிப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின் அது குளிர்ந்ததும் அவற்றை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இந்த பானம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவி புரிந்து, உடலில் உள்ள கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவுகிறது.

வேண்டுமானால் இந்த பானத்தை தயாரித்து தினமும் குடித்து வாருங்கள். இதனால் நல்ல பலனை விரைவில் காணலாம்.

சீரகம் மற்றும் பட்டை நீர்

சீரகம் மற்றும் பட்டை ஆகிய இரண்டுமே கொழுப்புக்களை கரைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த இரண்டையும் கொண்டு ஒரு பானத்தை தயாரித்து குடித்து வந்தால், தொப்பையை சீக்கிரம் காணாமல் போக வைக்கலாம்.

அதற்கு ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் சீரகத்தை எடுத்து, அத்துடன் 3 இன்ச் பட்டையையும் எடுத்து, 1 லிட்டர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பானமானது குளிர்ந்ததும் அதை வடிகட்டி அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் தொப்பையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்

எலுமிச்சை சியா நீர்

சியா விதைகள் குளிர்ச்சி பண்புகளைக் கொண்டதோடு உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன. அப்படிப்பட்ட சியா விதைகளை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து உட்கொண்டால், அது சிறப்பான பலனைத் தரும்.

அதற்கு ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் சியா விதைகளை எடுத்து அத்துடன் 1 கப் நீரை ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து அதில் 2 கப் நீரை ஊற்றி, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் தொப்பை குறுகிய நாட்களிலேயே காணாமல் போகும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று பானங்களும் அசிங்கமாக காணப்படும் தொப்பையைக் குறைக்க உதவுவதோடு கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவி புரியும். எனவே ஸ்லிம்மாக விரும்பினால் இந்த பானங்களுள் ஒன்றை தினமும் குடித்து வாருங்கள்.

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும் போதும் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக்குழுவின் கூட்டம், அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்துகொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் 

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்குச் செல்லாமல் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அதோடு இலத்திரனியல் கடவுச்சீட்டை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது. இதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு குழுவின் தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

ஒன்லைன் வீசா விண்ணப்பத்தில் காணப்படும் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் வெளிநாட்டவர்கள் சிரமமின்றி விசாவைப் பெறுவதற்குத் தேவையான பொறிமுறையை விரைவாகத் தயாரித்து நடைமுறைப்படுத்துமாறும், இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதிக வருமானம் ஈட்டும் வகையில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்க வேண்டியதன் தேவை இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இதற்கு அவசியமான நடவடிக்கைகளை கால தாமதம் இன்றி மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் சுண்டுக்குளியில் உள்ள தனியார் விடுதியில் மூவர் கைது!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் (29) மூவர் கைது செய்யப்பட்டனர்.

அந்த விடுதியில் சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும் , அதன் ஊடாக அங்கு கலாசார சீரழிவுகள் இடம்பெறுவதாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன .

கொழும்பு பெண்கள் கைது

அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.

இதன் போது , உரிய பதிவுகள் இன்றி விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கி இருந்த தெகிவளை பகுதியை சேர்ந்த இரு பெண்களை பொலிஸார் கைது செய்ததுடன் விடுதியின் முகாமையாளரையும் கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் முகாமையாளரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கைக்கு கடன் உதவி வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

 இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB)  மீண்டும் கடனுதவி வழஙகவுள்ளது.

அதன்படி  இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவை வழங்குவதற்காக 350 மில்லியன் டொலர் சிறப்பு கொள்கை அடிப்படையிலான கடனுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB)  இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

96 வயதில் நடைபோட்டியில் சாதனை படைத்த கனேடிய பெண்!

 கனடாவைச் சேர்ந்த 96 வயதான பெண் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

ராஜீனா பயர்ஹெட் என்ற பெண்ணே இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளார். ஐந்து கிலோ மீற்றர் தூர நடை போட்டியில் ராஜீனா உலக சாதனை நிலைநாட்டியுள்ளார்.

ஐந்து கிலோ மீற்றர் தூரத்தை 51 நிமிடங்கள் மற்றும் 9 செக்கன்களில் நடந்து சாதனை நிலைநாட்டியுள்ளார்.

தம்மை நினைத்து தாமே பெருமிதம் கொள்வதாக ராஜீனா தெரிவிக்கின்றார்.

95 வயது முதல் 99 வயது வரையிலான பிரிவில் ஐந்து கிலோ மீற்றர் தூரத்தை மிக வேகமாக நடந்து கடந்த உலக சாதனையை ராஜீனா நிலைநாட்டியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெட்டி லின்ட்பர்க் என்ற பெண் நிலைநாட்டியிருந்த சாதனையை ராஜீனா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். 

போதைப் பொருளுடன் சுற்றி திரிந்த பெண் ஒருவர் கைது!

  போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் ஹேனமுல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 610 மில்லி கிராம் போதைப்பொருள், 50 கிராம், ஐஸ், 3 கிலோ 240 கிராம் கேரள கஞ்சா மற்றும் 900 மாத்திரைகள் ஆகியவற்றை கைப்பற்றியதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 50 இலட்சம் ரூபா என கூறப்படுகின்றது.

சம்பவத்தில் கைதான சந்தேக நபர் ஹேனமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதான பெண் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

  உள்ளூர் சந்தையில் தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களின் விலை மீண்டும் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே தங்கத்தின் விலைக் குறைப்புக்குக் காரணம் என கொழும்பு செட்டியார் தெரு வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய நிலவரம்

அதன்படி இன்றைய நிலவரத்தின் பிரகாரம் 22 கரட் தங்கத்தின் விலை 150,800 ருவாகும். 24 கரட் தங்கம் ரூ. 163,000 முதல் ரூ. 164,000 ஆக உள்ளது.

அதேவேளை உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட விலையில் இருந்து தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

இலங்கை மத்திய வங்கி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை தளர்த்தியதுடன் சுமார் 843 வகையான பொருட்களுக்கு அந்த பொருட்களை இறக்குமதி செய்யும் போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான ‘பண வரம்பு தேவை’ கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.

இதில் கையடக்கத் தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்குவதாகவும் இந்த தீர்மானத்தினால் எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவடையும் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.