ரூபாவின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

ன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286.09 ஆகவும் விற்பனைப் பெறுமதி 294.69 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361.92 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 375.95 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299.14 ஆகவும் விற்பனைப் பெறுமதி 311.74 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201.91 ஆகவும் விற்பனைப் பெறுமதி 210.77 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182.13 ஆகவும் விற்பனைப் பெறுமதி 191.59 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211.32 ஆகவும் விற்பனைப் பெறுமதி 221.20 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனடாவில் மிகவும் தேடப்படும் நபர்களின் பட்டியல் வெளியானது!

கனடாவில் மிகவும் தேடப்பட்டு வரும் நபர்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் தேடப்பட்டு வரும் நபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஐந்து பேர் இந்த பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடா முழுவதும் தேடப்பட்டு வரும் 25 நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 10 பேர் ரொறன்ரோ பெரும்பாக பகுதி பொலிஸாரினால் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைப் பொருள் கடத்தல் படுகொலை சம்பவங்கள் என பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடையவர்களை இவ்வாறு தேடப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு தேடப்பட்டு வரும் பலர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இந்த தேடப்பட்டு வருவோர் பட்டியலில் புதிதாக ஐந்து பேர் இணைக்கப்பட்டுள்ளனர்

வானிலை முன்னறிவிப்பு !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவக்கூடும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காதலால் பறிபோன உயிர்!

சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டவல பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் பொல்லினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (04) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலில் காயமடைந்த இளம் பெண் கிலிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண், தாக்குதல் நடத்திய நபருடன் காதல் உறவில் ஈடுபட்டதாகவும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பொல்லினால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சிறிபாகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கனடாவில் புலம்பெயர்ந்தோருக்கு அதிர்ச்சி தகவல்!

கனடாவில் 2025 ஆம் ஆண்டு இறுதியில் பாரிய அளவிலான புலம்பெயர்ந்தவர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் அந்நாட்டு புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் வெளியேற வேண்டிய நிலைக்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட பல மில்லியன் தற்காலிக அனுமதிகள் காலாவதியாக உள்ளமையே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற புலம்பெயர்தல் குழு முன் விளக்கமளித்த மார்க் மில்லர்,

தற்காலிக அனுமதிகள் காலாவதியாகும் பெரும்பாலானோர் கனடாவில் இருந்து தாமாகவே வெளியேறக்கூடும் என கூறிய நிலையில், கொன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ரொம், சுமார் 4.9 மில்லியன் பேரின் தற்காலிக அனுமதிகள் காலாவதி ஆகும் நிலையில், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை கனடா அரசு எப்படி உறுதி செய்ய உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த மில்லர்,

நமது நாட்டுக்குள் வருவோரில் பெரும்பாலானோர் தற்காலிகமாக வந்துள்ளதால், அவர்களுடைய அனுமதிகள் காலாவதியானபின் இங்கு தங்க அவர்களுக்கு உரிமை இல்லை, ஆகவே அவர்கள் தாமாகவே வெளியேறிவிடுவார்கள் என்றார்.

அப்படி தாமாக வெளியேறாதவர்களை புலம்பெயர்தல் அமைச்சகம் எப்படி கையாளப்போகிறது என ரொம் விடாமல் கேட்க, அவர்களை வெளியேற்ற கனடா எல்லைப் பாதுகாப்பு ஏஜன்சிக்கு உரிமை உள்ளது என்றார் மில்லர்.

இந்த நிலையில் தற்காலிக அனுமதி பெற்று கனடாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழரசுக் கட்சி எம்பிக்களுக்கு உறுதி மொழி வழங்கிய ஜனாதிபதி

நாட்டில் எதிர்வரும் காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தம்மிடம் கூறியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தாவது,

சில இனவாத கருத்துக்களால் அதனைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையே நேற்று (04-12-2024) மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், காணி அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், எஸ்.குகதாசன், ஞானமுத்து ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், இளையதம்பி சிறிநாத் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றைய ராசிபலன்கள் 05.12.2024

மேஷம்

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும் நாள்.

ரிஷபம்

உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்

சந்திராஷ்டமம் இருப்பதால் தன்னம்பிக்கை குறையும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கடகம்

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனதிற்குப் பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் முடியும் நாள்.

சிம்மம்

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

குடும்பத்தில் உங்களின் நேரத்தை செலவழிப்பார்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் அன்புத் தொல்லை குறையும். உங்களை சுற்றி உள்ளவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். நாள் இல்லை.

துலாம்

தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புதுவேலை கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

தனுசு

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

கும்பம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மீனம்

உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும் படி இருக்கும். பிள்ளைகளின் கல்வியில் கவனம். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீரென்று அறிமுகமாகும் நபரால் பயனடைவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

ராஜபக்ஷர்களின் கோப்புகள் மாயம்!

 முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பான பல கோப்புகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

ஊடகவியலாளர் பொத்தல ஜயந்த கடத்தப்பட்டமை மற்றும் அவரது மனிதாபிமானமற்ற சித்திரவதை மற்றும் பலத்த காயங்கள் தொடர்பான விசாரணை தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக பொத்தல ஜயந்த தெரிவித்துள்ளார்.தமக்கெதிரான குற்றம் தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இணைய சேனலுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அவர், இது தொடர்பான மேலும் பல தகவல்களை வெளியிட்டிருந்தார்.

அரசியல் தஞ்சம் பெற்று தற்போது அமெரிக்காவில் வசிக்கும் பொத்தல ஜெயந்த, இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து தம் மீதான தாக்குதல் தொடர்பான தகவல்களை வழங்கியிருந்தார்.இந்நிலையில் 2009ஆம் ஆண்டு தம்மீது நடத்தப்பட்ட தாக்குதல் 2017ஆம் ஆண்டிலும் உரிய முறையில் விசாரிக்கப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.

அத்துடன், நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அந்தக் கலந்துரையாடலில் அவர் வெளிப்படுத்தினார்.-

கழுத்தறுத்து கொல்லப்பட்ட தம்பதியினர் ஒருவர் கைது!

அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்ஹென்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து தம்பதிகள் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைகள் கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், குறித்த சந்தேக நபர் நேற்று (03) காலி கோட்டை பகுதியில் வைத்து அஹங்கம பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உனவட்டுன பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்த கோரிக்கை!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக வாக்களித்த அநுர அரசாங்கம் அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி (Azath Saali) தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுள்ளார்.

இதனைக் கொண்டு அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அநுர அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று அசாத் சாலி கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன், பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதோடு, உரப்பற்றாக்குறைக்கும் அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும்.

இதேவேளை, கடந்த தேர்தல்கள் காலத்தில் மக்கள் மத்தியில் முன்வைத்த அனைத்து விடயங்களையும் நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால் தான் இந்த அரசாங்கம் வலுப்பெறும்.

இல்லையேல் இந்த அரசாங்கம் வீழ்ச்சியடைவதை யாராலும் தடுக்க முடியாது. தாங்கள் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இந்த அரசாங்கத்திற்கு உண்டு எனவும் அசாத் சாலி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.