கொழும்பின் பல பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று மாலை 05.00 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

அம்பத்தல நீர் வழங்கல் மேம்பாட்டு வலுசக்தி பாதுகாப்புத் திட்டத்தினால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

கற்பிட்டி விபத்து – சிறுவனின் தந்தையும் உயிரிழப்பு!

கற்பிட்டி – நுரைச்சோலை ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக நேற்று முன்தினம் இரவு (19) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கற்பிட்டி – தலவில பகுதியைச் சேர்ந்த வர்ணகுலசூரிய யூட் நிசாந்த (வயது 36) எனும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற போது, கற்பிட்டி பகுதியிலிருந்து பாலாவியை நோக்கிப் பயணித்த மகேந்திர ரக லொறியொன்றும், எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த மோட்டார் சைக்கிளில் உயிரிழந்த ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த சிறுவன் உட்பட மூவரையும் சிகிச்சைக்காக அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது, விபத்தில் காயமடைந்த சிறுவன் அன்றிரவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.

மேலும், விபத்தில் படுகாயமடைந்த இருவரும் புத்தளம் தள வைத்தியசாலையில் இருந்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையிலேயே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இருவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 உயிரிழந்த சிறுவனின் தந்தையே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விபத்தில் காயமடைந்த மூன்றாவது நபர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் தாயார் வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில், தந்தையின் பராமரிப்பில் குறித்த சிறுவன் வாழ்ந்து வந்த நிலையில் சிறுவனும், தந்தையும் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

விபத்தில் நேற்று உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று அம்மம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சாரதி, முறையற்ற வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்து சம்பவம் இடம்பெற்ற விதம் பற்றி வீதியோரத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருக்கும் சீ.சி.ரி.வி கமராவிலும் பதிவாகியுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி சுனில் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரெஜினி செல்வநாயகம் காலமானார்

நாட்டின் மூத்த நடனக் கலைஞர்களில் ஒருவரான  ரெஜினி செல்வநாயகம் காலமானார்.

நேற்றிரவு அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜகிரிய கலப்பலுவ பிரதேசத்தில் வசித்து வந்த ரெஜினி செல்வநாயகம் இறக்கும் போது அவருக்கு  87 வயதாகும்.

மறைந்த ரெஜினி செல்வநாயகத்தின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும்.

நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி!

ரக்பி உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து ரக்பி அணி தகுதி பெற்றது.

அர்ஜென்டினாவுக்கு எதிரான முதல் அரையிறுதியில் 44க்கு 6 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் வெற்றி பெறும் அணி நியூசிலாந்து அணியுடன் எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.

இன்றைய ராசிபலன்21.10.2023

மேஷ ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷப ராசி அன்பர்களே!

வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதே னும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிவ வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு உண்டு.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் மந்தமாகத்தான் இருக்கும். மகாலட்சுமியை வழிபட சிறப்பான பலன்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவி னரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். ஆஞ்சநேயர் வழிபடுவது நன்று.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.. மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு ஒன்று எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண் டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக் கும். லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாக இருக்கும். விநாயகரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற் படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பைரவரை வழிபடுவது நன்று.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்லவும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படு வார்கள். குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பேச்சுவாரத்தைகள் மூலமே பிரச்சினைகளுக்கான தீர்வினை காண வேண்டும்

காலாவதியான பூகோள அரசியல் தந்திரங்களை புறந்தள்ளி விட்டு முரண்பாடுகளற்ற பேச்சுவாரத்தைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வினை காணவேண்டும் என்ற சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் கருத்துக்கள் தன்னை கவர்ந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், உணர்வுபூர்வமான பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற சீன ஜனாதிபதியின் கருத்தினை நிரூபிக்கும் வகையில் தன்னுடைய அரசியல் பயணம் அமைந்துள்ளதாகவும், குறித்த நம்பிக்கையுடனேயே ஜனநாயக நீரோட்டதில் இணைந்து கொண்டு தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் தற்போதைய அரசாங்கத்தில் சிரேஸ்ட அமைச்சர்களுள் ஒருவராகவும் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இடம்பெற்ற கடலசார் ஒத்துழைப்பிற்கான கருப்பொருள் எனும் தொணிப் பொருளில் கடந்த 18 ஆம் திகதி சீனாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பெல்ட் அன் றோட் எனப்படும் சீனாவினால் உருவாக்கப்பட்டு வருகின்ற சர்வதேச தொடர்பாடல் முயற்சியின் ஓரு பகுதியாக இடம்பெற்ற குறித்த மூன்றாவது சர்வதேசக் கலந்துரையாடலில் இலங்கையின் பிரதிநிதியாக கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் உரையற்றுகையில்,

ஆயுதப் போராளியாக ஒருகாலத்தில் செயற்பட்ட நான், பேச்சுவார்த்தைகள் மூலமே எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்பததை புரிந்து கொண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டு செய்றபட்டு வருகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

குறித்த சர்வதேச கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஆரம்ப உரையாற்றிய சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியைப் முன்பெடுப்பதில் காலாவதியான புவிசார் அரசியல் சூழ்ச்சியை சீனா பின்பற்றாது எனவும், அனைத்து தரப்பினருக்கும் வெற்றியளிக்கக் கூடிய ஒரு புதிய வகை சர்வதேச உறவுகளை வளர்க்க வேண்டும் என்பதுடன், மோதலின்றி நட்பு ரீதியான பேச்சுவார்த்தைகள் மூலமே உணர்வுபூர்வமான பிரச்சினைகளை தீர்ககவும், நீதியின் அடிப்படையிலான மத்தியஸ்தத்தை ஊக்குவிக்கவும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தமையையே கடற்றொழில் அமைச்சரினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆயதப் போராடத்தின் ஊடாகவே தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் பாலஸ்தீன விடுதலைப் போராட்ட அமைப்புக்களிடம் ஆயுதப் பயிற்சியை பெற்றக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் ஆயுதப் போராட்ட அமைப்பின் தலைவர்களுள் ஒருவராக செயற்றபட்டிருந்த நிலையில், ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன் இடம்பெற்ற பயங்கர விபத்து – பலர் காயம்!

பதுளை – மீகஹகிவுல, யோதஉல்பத பகுதியில் பஸ்ஸொன்று பள்ளமொன்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 26 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 22 பயணிகள் மீகஹகிவுல வைத்தியசாலையிலும், 4 பயணிகள் பதுளை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் செல்லும் இலங்கையர்களுக்கான எச்சரிக்கை!

எல்லை தாண்டி ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த இரண்டு இலங்கை பெண்கள் அந்நாட்டு சட்ட அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மேலும் மூன்று இலங்கையர்கள் போர்ச் சூழலுக்கு மத்தியில் எல்லையை கடந்து இஸ்ரேலுக்கு செல்ல முயன்று அந்நாட்டு சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் சிக்கினர்.

அதேபோல், இவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் மீண்டும் ஜோர்தானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் எல்லையை கடந்து வேறு நாட்டுக்கு செல்வது மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டாகும் எனவும் அது தவறான நடத்தை எனவும் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான யுத்த சூழ்நிலையில் நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து செல்லும் போது அவர்களை பயங்கரவாதிகளாக கருதி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குறிப்பாக இஸ்ரேல் போன்ற நாட்டில் உங்களுக்காக யாரும் முன்னிலையாக  மாட்டார்கள் என்றும்  காமினி செனரத் யாப்பா வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எந்த வகையிலும் தலையிடாது என அவர் குறிப்பிடுகின்றார்.

மகளை காணவில்லை என கதறும் தாய்!

ஜா-எல, ஏக்கல, கொரலேலியவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

கோஷிலா ரோஷேன் என்ற சிறுமியே காணாமல் போயுள்ளார்.

கடந்த 8ம் திகதி காலை 7.30 மணியளவில் மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

12 நாட்களாகியும் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்று அவரது தாயார் கூறினார்.

குறித்த யுவதி கடந்த 8ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியேறுவது வீட்டின் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிறுமியின் தாய்,

“அவளைப் பற்றி இன்னும் எந்த தகவலும் இல்லை. தொடர்ந்தும் காத்திருக்க முடியாமல்தான் ஊடகங்களுக்கு தெரிவித்தோம். யாராவது எனது மகளைப் பார்த்திருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

இலங்கைக்கு பாராட்டு தெரிவித்த IMF!

”Governance Diagnostic Report’ அறிக்கையை உரிய நேரத்தில் வௌியிடும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக சர்வதேச நாயண நிதியம் தெரிவித்துள்ளது.

மேலும், கடன் நிவாரணத்திற்காக சீனாவின் Exim வங்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான தற்காலிக ஒப்பந்தத்தை சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டு ஆய்வு செய்யும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.