மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல்

காஸா பகுதியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

எனவே, வடக்கு காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவில் தெற்கு காசா பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவக் குழுக்கள் காசா பகுதிக்கு அருகில் குவிந்துள்ளன, ஒரு கட்டத்தில் காசா பகுதியை ஆக்கிரமிக்கக்கூடும் என்று போர் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, சுமார் மூன்று இலட்சம் பலஸ்தீனர்கள் வாழும் மேற்கு எல்லையில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்றைய ராசிபலன்22.10.2023

மேஷ ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷப ராசி அன்பர்களே!

வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதே னும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிவ வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு உண்டு.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் மந்தமாகத்தான் இருக்கும். மகாலட்சுமியை வழிபட சிறப்பான பலன்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவி னரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். ஆஞ்சநேயர் வழிபடுவது நன்று.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.. மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு ஒன்று எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண் டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக் கும். லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாக இருக்கும். விநாயகரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற் படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பைரவரை வழிபடுவது நன்று.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்லவும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படு வார்கள். குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

இங்கிலாந்து அணிக்கு 400 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Aiden Markram தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி, Jos Buttler தலைமையிலான இங்கிலாந்து அணியை இன்று (21) நடைபெறுகிறது.

போட்டியில் நாணய சுழற்சி சற்றுமுன்னர் இடம்பெற்ற நிலையில் நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 399 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் Heinrich Klaasen அதிகபடியாக 109 ஓட்டங்களையும், Reeza Hendricks 85 ஓட்டங்களையும், Rassie van der Dussen 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Reece Topley 3 விக்கெட்டுக்களையும், Gus Atkinson, Adil Rashid ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி இங்கிலாந்து அணிக்கு 400 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக முழு ஆதரவு வழங்கப்படும்

மலையக மக்கள் எதிர்நோக்கிய உரிமை ரீதியான பிரச்சினைகள், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிரான சில பெருந்தோட்ட நிறுவனங்களின் அடக்குமுறைகள், உழைப்பு சுரண்டல்கள் மற்றும் மலையக மக்களுக்காக நாம் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலய பிரதானிகளிடம் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன், மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு தமது தொழிற்சங்கத்தின் முழு ஆதரவு வழங்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

ஜெனிவாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக பிரதானிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் உயர்தானிர் அலுவலகத்தின் பிரதானி மேதகு செட்யா ஜெனிங்ஸ், இலங்கை தொடர்பான இலங்கைக்கான மனித உரிமை பிரிவின் தலைம அதிகாரி எலினா செங் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.

அமைச்சருடன், இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, அமைச்சின் ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் கடந்த 200 வருடங்களாக கடந்துவந்த பாதை குறித்தும், அவர்கள் எதிர்நோக்கிய சவால்கள் மற்றும் மனித உரிமை ரீதியான பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சர் தலைமையிலான குழுவினர் எடுத்துரைத்தனர்.

2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒகோடோவா , மலையக பெருந்தோட்ட சமூகத்தின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்திருந்தார். பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகின்றது, நவீன அடிமைகளாக அவர்கள் நடத்தப்படுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டிருந்தார். இந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு கம்பனிகளுக்கும், அரசுக்கும் அழுத்தங்களை பிரயோகித்தோம் என ஐ.நா. அதிகாரிகளிடம், அமைச்சர் தரப்பினர் எடுத்துரைத்தனர்.

ஆனால் மலையகத்தில் நாம் முன்னெடுத்துள்ள வீட்டு திட்டம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி எதிர்காலத்தில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வீட்டு திட்டம், மலையக மக்களுக்கான விசேட காணி உரிமை வழங்கும் திட்டம் பற்றியும் விளக்கமளிக்க பட்டதோடு இவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என என்பதையும் முன்வைக்கப்பட்டது.

மீண்டும் ஒருமுறை மனித உரிமை உயர்ஸ்தானிகராலய தூதுக்குழு இலங்கைக்கும் பெருந்தோட்ட பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொள்ள வர வேண்டும் என்ற அழைப்பையும் அமைச்சர் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம்!

நிதி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு முறைமையில் விரிவான மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நிதி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (21) காலை தெரணியகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு தெரிவித்தார்.

காணாமல் போன மாணவர்கள் கண்டுபிடிப்பு

புகையிலை மற்றும் சுண்ணாம்பு வைத்திருந்த போது அதிபரால் கண்டிக்கப்பட்ட நாத்தாண்டிய பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவர்கள் இருவர், காணாமல் போன நிலையில் குருநாகல் புத்தளம் வீதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போன மாணவர் ஒருவரின் உறவினர் வீட்டிலேயே குறித்த மாணவர்கள் இருவரும் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இரண்டு மாணவர்களும் காணமல் போனபை பற்றி, ஒரு மாணவனின் தாயும் மற்றைய மாணவனின் தந்தையும் நேற்று (19) நள்ளிரவு மாரவில தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

புகையிலை மற்றும் சுண்ணாம்பு போன்றவற்றை வைத்திருந்த நிலையில், பிடிபட்டதையடுத்து அதுபற்றி பாடசாலை அதிபர் அந்த இரண்டு மாணவர்களையும் கண்டித்ததாகவும், அதனையடுத்து அவ்விருவரும் அழுதுகொண்டிருந்ததாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

மாரவில தலைமையக பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று காணாமல் போன நிலையில் மீட்கப்பட்ட இரு மாணவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவர்களை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

புகையிரத கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் குறித்த பெண் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (20) மாலை சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியங்கேமுல்ல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லியங்கேமுல்ல, சீதுவ பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வீடு திரும்பிய டயானா கமகே

பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, சிகிச்சையின் பின் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 மணித்தியாலங்களில் அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்ட நிலையிலேயே அவர் மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தம்மை தாக்கியதாக கூறி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

சட்டவிரோதமாக இங்கிலாந்து செல்ல முயன்ற யாழ் இளைஞன் கைது!

சட்டவிரோதமாக இங்கிலாந்துக்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை  சேர்ந்த இளைஞன் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (20) கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேரந்த 23 வயது இளைஞன் என  கூறப்படுகின்றது. 

போலி விசாவில் சிக்கிய இளைஞன்

குறித்த இளைஞன்  போலி விசாவை பயன்படுத்தி  நேற்றுக் காலை கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் டோஹா சென்று அங்கிருந்து இங்கிலாந்துக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பின்னர் அவர் பயண அனுமதிக்காக விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் தனது விசா மற்றும் ஏனைய ஆவணங்களை ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து அனைத்து ஆவணங்களையும் சோதனையிட்ட அதிகாரிகள், விசா போலியானது என உறுதி செய்த நிலையில், குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்தக்கது.

பாலஸ்தீனத்தை உலக வரைபடத்திலிருந்து முழுமையாக நீக்க இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கும் அமெரிக்கா

புட்டினுக்கு எதிராக யுத்தம் செய்ய அஞ்சிய அமெரிக்கா ஹமாஸுக்கு எதிராக யுத்தம் செய்வதற்காக இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருவது பலஸ்தீனத்தை முழுமையாக உலக வரைபடத்தில் இருந்து நீக்கும் நோக்கத்திலேயே ஆகும் என ஐக்கிய மக்கள் சக்தி  உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20)  நடைபெற்ற இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர்  அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் முழு பலஸ்தீனத்தையும் உலக வரைப்படத்தில் இருந்து நீக்குவதற்கு முயற்சிக்கின்றனர். மேற்குலக நாடுகள் ஹமாஸை தோற்கடிப்பது போன்ற விடயங்களையே கதைக்கின்றனர். 

ஆனால் அங்கே பலஸ்தீனர்கள் படும் துன்பங்களை வெளிப்படுத்துவதில்லை. இஸ்ரேல் – அமெரிக்க இராணுவத்தின் வெற்றிகள் தொடர்பிலேயே கதைக்கின்றனர். அன்று புட்டினுக்கு எதிராக யுத்தம் செய்ய பயந்தவர்கள் இப்போது ஹமாஸுக்கு எதிராக யுத்தம் செய்வதற்காக இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா வருகின்றது.

பிக்குகள் உள்ளிட்ட குழுக்கள் ஐ.நாவுக்கு சென்று இஸ்ரேலுக்காக கதைக்கின்றனர். இவர்கள் வெட்கப்பட வேண்டும். இவ்வாறு பிரபாகரனுக்காகவும் கதைத்து அவருக்கும் 1947இல் வழங்கியதை போன்று நாட்டில் ஒருபகுதியை வழங்கியிருந்தால் இப்படிதான் இலங்கைக்கும் நடந்திருக்கும்.

நான் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலஸ்தீனத்திற்கு சென்றிருந்தோம். அங்கே இஸ்ரேல் படையினரே இருக்கின்றனர். அங்கு கடும் நெருக்கடிக்குள்ளேயே மக்கள் இருந்தனர். அவர்களுக்கு விடுதலை வேண்டும் அவர்களுக்கு சுதந்திரத்தை வழங்க வேண்டும் என்றார்.