கிளிநொச்சி இளம் குடும்பஸ்தர் கொலை மூவர் கைது!

கிளிநொச்சி பகுதியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் கடந்த 25ம் திகதி இரவு 10 மணியளவில் வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பத்தரே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட இராமநாதபுரம் பொலிஸார் ஒரு பெண் உட்பட மூவரை இன்றைய தினம் (27-10-2023) பிற்பகல் கைது செய்துள்ளனர்.

உயிரிந்தவரை தொலைபேசி மூலம் அழைத்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேகநபர்களை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உறக்கமின்றி வாழும் கனேடிய மக்கள்!

கனடாவில் மக்கள் உறக்கமின்றி வாழ்வதாக கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இளம் கனேடியர்கள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அதிருப்தி அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பொருளாதார மற்றும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக உறக்கம் இன்றி தவிப்பதாக கருத்துக் கணிப்பில் பங்குபற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் ஆர் பி சி வாங்கினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

40 வீதமான வயது வந்த கனடியர்கள் நிதி பிரச்சனைகள் காரணமாக உறக்கம் இன்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கனடாவில் முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு தற்போது உணவு வங்கிகளின் பயன்பாடு வெகுவாக உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

டானிஸ் அலி கைது!

அரகலய மக்கள் போராட்டத்தின் செயற்பாட்டாளர் டானிஸ் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு கவுன்டருக்கு அருகில் கலவரத்தில் ஈடுபட்டமைக்காக அவர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் (requirement) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த தேவைகள்  (requirement) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு முதலீட்டாளர் ஒரு சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகத்தை நடத்த குறைந்தபட்சம் 05 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டும்.

குறித்த முதலீட்டாளருக்கு சுங்க வரியில்லா வர்த்தக நடவடிக்கைகளில் உலகளாவிய அனுபவமும் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுங்க வரியில்லா வணிக வளாக வர்த்தகத்தை நடத்துவதற்கு, ஒரு முதலீட்டாடளர் குறைந்தபட்சம் 07 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டும் என்றும் குறித்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நண்பியின் திருமணத்தில் கலந்து கொண்ட யுவதி உயிரிழப்பு!

புத்தளத்தில் தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இளம் யுவதியொருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் நேற்று (27) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

ஆனமடுவ, தசநாயக்க புரத்தைச் சேர்ந்த அயோத்திய தேசானி (வயது 20) யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த மாணவி கடந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதியவர் எனவும், புத்தளத்தில் உள்ள தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் (26) இரவு புத்தளத்திற்கு வருகை தந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

திருமண நிகழ்வில் முழுமையாக கலந்துகொண்ட யுவதி, திருமண விருந்தை சாப்பிட்டதன் பின்னர் தனது உடல்நிலை சரியில்லை எனவும் உடனடியாக தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனவும் நண்பியிடம் கூறிவிட்டு, அங்கிருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இவ்வாறு முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருக்கும் போது குறித்த யுவதி திடீரென சுகயீனமடைந்ததுடன், அவர் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த யுவதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அந்த யுவதி நேற்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்துள்ளார் என புத்தளம் பகுதிக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார். 

உயிரிழந்த யுவதியின் சடலம் மீதான மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின்னர், சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், உயிரிழந்த மாணவியின் சில உடல் அவையங்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னரே மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்க முடியும் எனவும் புத்தளம் பகுதிக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மேலும் தெரிவித்தார்.

இன்றைய ராசிபலன்28.10.2023

மேஷ ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷப ராசி அன்பர்களே!

வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதே னும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிவ வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு உண்டு.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் மந்தமாகத்தான் இருக்கும். மகாலட்சுமியை வழிபட சிறப்பான பலன்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவி னரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். ஆஞ்சநேயர் வழிபடுவது நன்று.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.. மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு ஒன்று எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண் டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக் கும். லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாக இருக்கும். விநாயகரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற் படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பைரவரை வழிபடுவது நன்று.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்லவும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படு வார்கள். குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது

போராட்டம் ஆரம்பம் – கொழும்பில் மூடப்பட்ட வீதி

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதனால், தாமரைத் தடாக சந்தியை அண்மித்துள்ள கொழும்பு கிரீன் பாத் பகுதி மற்றும் பொது நூலகம் அமைந்துள்ள பகுதி மூடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

நீர்கொழும்பில் பாடகி பாலியல் பலாத்காரம்

  நீர்கொழும்பு பிரதேசத்தில் பிரபல இசை குழு ஒன்றில் பாடகியாக உள்ள இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் அதே இசை குழுவின் கலைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் ஜா எல துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது கிட்டார் கலைஞர் ஆவார். பாதிக்கப்பட்ட 28 வயதான இளம்பெண் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் கிட்டார் கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஸ்ஸிற்குள் பாலியல் பலாத்காரம்

முறைப்பாட்டில் சந்தேக நபர் தனது இசைக்குழுவின் பயண பஸ்ஸிற்குள் வைத்து உடல் ரீதியாகவும் வாய்மொழியாகவும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபர் சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பணியக அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைதான , சந்தேக நபர் வெலிசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிர்வாண புகைப்பட மோசடி தொடர்பில் விசாரணை

02 முதல் 07 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் சில பாலியல் காட்சிகளை பதிவு செய்து சமூக ஊடகங்களில் விற்பனை செய்யும் மோசடி தொடர்பாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்டுள்ள குழுவினால் மேற்கொள்ளப்படும் இந்த மோசடி மூலம் 1,000 ரூபாவில் இருந்து பல்வேறு விலைகளில் படங்கள் மற்றும் காணொளி விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோசடியாளர்கள் இதை மிக நுணுக்கமாகச் செய்வதால் குழந்தைகளை எப்படி, எங்கு பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுக்க முயன்றதாக கூறப்படும் பண்டாரவளை சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவரை பெற்றோர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட 28 இலங்கையர்கள்

குவைத்தில் நீண்ட காலமாக விஸா இன்றி, சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் கொண்ட குழுவினர் இன்று (27) குவைத்திலிருந்து, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

மேற்படி குழுவினர் இன்று (27) காலை 06.30 மணியளவில் குவைத்தில் இருந்து UL-230 எனும் இலக்கமுடைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்களில் 24 வீட்டுப் பணிப்பெண்களும் 04 வீட்டுப் பணியாளர்களும் அடங்குவதுடன், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தால் போக்குவரத்து செலவுக்காக தேவையான பணத்தையும் வழங்கியுள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக குவைத்தில் தொழில்புரிந்த நிலையில் வருகை தந்தவர்கள், இலங்கைக்கு வருவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்தவர்கள் எனவும், இந்த இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு தூதரக அதிகாரிகளுடன் இணைந்து அந்நாட்டின் பொலிஸார், குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நீதிமன்றத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.