இன்றைய ராசிபலன்01.11.2023

மேஷ ராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபடுவது நன்று.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். செலவுகள் அதிகரித்தாலும் கடன் வாங்காமல் சமாளித்துவிடுவீர்கள். அதிகரிக்கும் பணிச்சுமையின் காரண மாக உடல்அசதி உண்டாகும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் மனஅமைதி பெறலாம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். விற்பனை வழக்கம்போலவே இருக்கும். அம்பிகையை வழிபட சிரமங்கள் குறையும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும்ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள்.

மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உங்கள் ஆலோசனை உறவினர்களால் பாராட்டப்படும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாளாக அமையும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர் களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். விநாயகரை வழிபடுவது நன்று.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத உறவினர் வருகைக்கு வாய்ப்பு உண்டு.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.

சிம்ம ராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.மாலையில் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள் வீர்கள். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். அம்பிகையை வழிபடுவது நலம் தரும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்க்கவும்.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். பிற்பகலுக்கு மேல் தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. விற்பனை வழக்கம்போலவே இருக்கும். ஆஞ்சநேயரை வழிபட வெற்றிகள் வசப்படும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பது தாமதமாகும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறை முகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று வேங்கடேச பெருமாளை வழிபட சிரமங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது மிக அவசியம்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில பிரச்னைகள் ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விநாயகரை வழிபட சிறப்பான பலன்கள் ஏற்படும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

தனுசு ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படும் நாள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். விற்பனை வழக்கம்போல நடைபெறும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபடுவது நன்று.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரியம் அனுகூலமாகும்.

மகர ராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க் கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையாக இருப்பது அவசியம். உடல் நல னில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். மகாலட்சுமி வழிபாடு நலம் சேர்க்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கும்பராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். தாயின் விருப் பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பைரவரை வழிபடுவது நன்று.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடன்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். ஆனால், புதிய முயற்சிகளை பிற்பக லுக்கு மேல் தொடங்குவது நல்லது. தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல் இருக்கும். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

வடமாகாண பூப்பந்தாட்ட போட்டி ஆரம்பம்!

வட மாகாண பூப்பந்தாட்ட போட்டி இன்று (31) ஆரம்பமானது. குறித்த போட்டிகள் இன்று முதல் 5 நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த போட்டியின் ஆரம்ப நிகழ்வு வடமாகாண பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 10 மணியளவில் ஆரம்பமானது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள உள்ளக அரங்கில் ஆரம்பமான குறித்த ஆரம்ப நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது வருகை தந்த அதிதிகளுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

அடுத்த மின்சார கட்டணம் திருத்தும் நாள் அறிவிப்பு!

அடுத்த மின்சார கட்டண திருத்தம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

ஆண்டுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை திருத்த அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த வருடம் ஒக்டோபர் மாதம் மின் கட்டண திருத்தம் செய்யப்பட்டதால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி மின் கட்டணம் திருத்தப்படாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, அடுத்த மின்கட்டண திருத்தம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதியே மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரத்தில் 15 வயது சிறுமி ஒருவர் கடத்தல்!

அனுராதபுரம் ஹெட்டுவெவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் திவுல்வெவ பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

ஆனால் கடத்தப்பட்ட சிறுமி குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

சிறுமி நேற்று அதிகாலை 1.00 மணியளவில் தனது வீட்டில் இருந்த போது கடத்தப்பட்டுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் திவுல்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று கடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பாடசாலையில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வடக்கில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகும் வீதம் அதிகரித்து உள்ளதாகவும், தாங்களாகவே வாசிக்கும் எழுதும் திறன் ஆரம்ப கல்வி மாணவர்கள் இடையில் குறைவடைந்து வருவதாகவும் வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், 

அரசாங்கம் கல்விக்காக பெருமளவான நிதியை செலவழித்து வருகிறது. இளம் வயதினர் கல்வியில் சிறந்து விளங்கினால் தான் நாடு முன்னோக்கி செல்லும். 

வடமாகாணத்தை பொறுத்தவரையில் கல்வியில் பின்னோக்கி செல்வது வேதனையான விடயமாகும். வடக்கில் தற்போது பாடசாலையில் இருந்து இடை விலகும் மாணவர்களின் விகிதம் அதிகரித்து செல்கிறது. 

அதேவேளை, சுயமாக வாசிக்கும், எழுதும் திறன்  ஆரம்ப பிரிவு மாணவர்கள் மத்தியில் குறைவடைந்து செல்கிறது. இதுவொரு ஆபத்தான விடயமாகும். எனவே  ஆரம்ப பிரிவு மாணவர்களின் சுயமாக வாசிக்கும் எழுதும் திறனை வளர்ப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார். 

இன்றும் பிற்பகல் 2 மணிக்குப் பின் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (31) பிற்பகல் 2.00மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அஸ்வெசும திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் புதிய தீர்மானம்!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அஸ்வெசும வாரத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை அஸ்வெசும பயனாளிகளாக தகுதி பெற்ற குடும்பங்கள், இதுவரையில் பலன்களைப் பெறாத குடும்பங்களுடன், தொழில்நுட்பக் கோளாறால் உதவித்தொகை தாமதமாகியுள்ளமை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

மேலும், அஸ்வெசும பயனாளிகளுக்கான ஓகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவு நடவடிக்கைகள் நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

“தற்போது, ​​ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகளை வழங்கியுள்ளோம். அடுத்ததாக, நிதியமைச்சு, திறைசேரி மூலம் 8.5 பில்லியன் ரூபாவை 1,365,000 பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கும். அதன்படி, புதன்கிழமை முதல் பயனாளிகள் அவர்களின் பலன்களைப் பெற முடியும்.” என்றார்.

நாளை கொழும்பில் முன்னெடுக்கப்பட இருக்கும் பாரிய போராட்டம்

அனைத்து மின்சார ஊழியர்களையும் நாளை (01) கொழும்புக்கு வரவழைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சார சபையை விற்பனை செய்ய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக மற்றும் சில  கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

இதேவேளை, மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நாளை நடைபவனி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (30) இரவும் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்திற்கு எதிராக மக்கள் தீப்பந்தங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக “அத தெரண” செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, உத்தேச மின்சாரத்துறை சீர்திருத்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் அமைச்சரவையின் அவதானம் மற்றும் ஒப்புதலுக்காக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் மூலம், மின்சார சபையின் சேவைகள் திறக்கப்பட்டு, தனியாருக்கு மின்சார சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் போட்டித்தன்மை ஆகியவை மேம்படுத்தப்படும்.

முன்மொழியப்பட்ட மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்த பின்னர், அது வர்த்தமானியாக வெளியிடப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.

அபிவிருத்தி நிறுவனம் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களின் ஆற்றல் மற்றும் சட்ட நிபுணர்களின் உதவியுடன் கடந்த 10 மாதங்களாக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

யாழில் பூட்டிய வீட்டினுள் சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் நெடுந்தீவு மேற்குப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குணாராசா தனுஷன் என்பவர் இனங்காணப்பட்டுள்ளார்.

பூட்டிய வீட்டினுள் படுக்கையில் கிடந்த சடலம்

அவரது உறவினர் வீட்டுக்கு அண்மையில் உள்ள ஆட்களற்ற வீட்டினை குறித்த இளைஞரே பராமரித்து வருவதாகவும், பகல்வேளைகளில் அவ்வீட்டில் படுத்து உறங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை (30) அவரை காணவில்லை என வீட்டார் தேடிச்சென்றவேளை பூட்டிய வீட்டினுள் படுக்கையிலேயே இறந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம்  தொடர்பில் நெடுந்தீவு பிரதேச பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில்,  இளைஞரின் உயிரிழப்புக்கான  காரணம் வெளியாகவில்லை.  

இன்றைய ராசிபலன்31.10.2023