இன்று முதல் அமுலுக்கு வரும் நியமனங்கள்

இன்று (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் குழு மற்றும் கல்வி சேவைகள் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரச சேவை ஆணைக்குழுவால் இரண்டு வருட காலத்திற்கு இந்த நியமனங்கள்  வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, சுகாதார சேவைகள் குழுவின் தலைவராக டி.எம்.எல்.சி. சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய உறுப்பினர்களாக கலாநிதி ஹப்புகொட மற்றும் நிமல் சரணதிஸ்ஸ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வைத்திய அதிகாரிகள், பல் வைத்திய அதிகாரிகள் மற்றும் ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளை ஆரம்ப தரத்திற்கு  நியமித்தல், சேவையை உறுதிப்படுத்துதல், வருடாந்த இடமாற்றங்களை மேற்கொள்வது மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வது உட்பட பல பணிகளை சுகாதார சேவை குழு மேற்கொள்கிறது.

அரச சேவை ஆணைக்குழுவால் கல்விச் சேவைக் குழுவின் புதிய தலைவராக  ஜே.ஏ. ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, எம்.என்.கே.  வீரசிங்க மற்றும் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய ராசிபலன்02.11.2023

மேஷ ராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபடுவது நன்று.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். செலவுகள் அதிகரித்தாலும் கடன் வாங்காமல் சமாளித்துவிடுவீர்கள். அதிகரிக்கும் பணிச்சுமையின் காரண மாக உடல்அசதி உண்டாகும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் மனஅமைதி பெறலாம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். விற்பனை வழக்கம்போலவே இருக்கும். அம்பிகையை வழிபட சிரமங்கள் குறையும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும்ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள்.

மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உங்கள் ஆலோசனை உறவினர்களால் பாராட்டப்படும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாளாக அமையும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர் களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். விநாயகரை வழிபடுவது நன்று.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத உறவினர் வருகைக்கு வாய்ப்பு உண்டு.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.

சிம்ம ராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.மாலையில் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள் வீர்கள். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். அம்பிகையை வழிபடுவது நலம் தரும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்க்கவும்.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். பிற்பகலுக்கு மேல் தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. விற்பனை வழக்கம்போலவே இருக்கும். ஆஞ்சநேயரை வழிபட வெற்றிகள் வசப்படும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பது தாமதமாகும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறை முகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று வேங்கடேச பெருமாளை வழிபட சிரமங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது மிக அவசியம்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில பிரச்னைகள் ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விநாயகரை வழிபட சிறப்பான பலன்கள் ஏற்படும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

தனுசு ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படும் நாள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். விற்பனை வழக்கம்போல நடைபெறும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபடுவது நன்று.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரியம் அனுகூலமாகும்.

மகர ராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க் கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையாக இருப்பது அவசியம். உடல் நல னில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். மகாலட்சுமி வழிபாடு நலம் சேர்க்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கும்பராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். தாயின் விருப் பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பைரவரை வழிபடுவது நன்று.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடன்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். ஆனால், புதிய முயற்சிகளை பிற்பக லுக்கு மேல் தொடங்குவது நல்லது. தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல் இருக்கும். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

யாழில் மோசமான செயலில் ஈடுபட்ட பெண் கைது!

  யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு வியாபாரம் நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டுக்கு சென்று சோதனை நடாத்திய போது 5 லீட்டர் கசிப்பை பொலிஸார் மீட்டனர்.

அதனை அடுத்து கசிப்பை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டில் இருந்த 27 வயதான பெண்ணை கைது செய்தனர். 

தாழ்நில பகுதி மக்களுக்கான அறிவுறுத்தல்

நீர்ஏந்து பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக உடவலவ நீர்த்தேக்கம் தற்போது நிரம்பி வருகின்றது.

இதன் காரணமாக உடவலவ நீர்த்தேக்கம் அடுத்த 48 மணித்தியாலங்களில் நிரம்பி வழிய ஆரம்பிக்கும் என மகாவலி அதிகார சபையின் நீர் முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபையின் நீர் முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதன்படி, உடவலவ நீர்த்தேக்க ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள தாழ்நில மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிகெட் சபை மேற்கொண்டுள்ள அவசர தீர்மானம்!

உலக கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.

அதன்படி டெல்லி மற்றும் மும்பையில் நடைபெறும் போட்டிகளின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த நகரங்களில் காற்று மாசு அபாயகரமான அளவில் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜே.ஷாவினால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, டெல்லி மற்றும் மும்பையை மையமாக கொண்டு நடைபெறும் உலக கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கீழ் வரும் எந்த ஒரு போட்டியிலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உண்மையான உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு வீட்டுரிமை

அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் உண்மையான உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு வீட்டுரிமையை  மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இவ்வாறான கோரிக்கைகள் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் அமைச்சின் மக்கள் தினத்தன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொரளை, ஓவல் வியூ ரெசிடென்சீஸ் வீடமைப்புத் திட்டத்தின் வீட்டு அலகுகளை உண்மையான  உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு நேரடியாக மாற்றுவதற்கு அனுமதி கோரி அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.

பொரளை, ஓவல் வியூ ரெசிடென்சீஸ் வீடமைப்புத் திட்டம் என்பது அரச ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்ட நடுத்தர வருமான வீட்டுத் திட்டமாகும். நவீன வசதிகளுடன் கூடிய 24 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டுள்ளது. இந்த வீட்டுத் தொகுதியில் 608 குடியிருப்புகள் மற்றும் 5 வணிக அலகுகள் உள்ளன.

அதன்படி, வீட்டிற்குரிய முழுப் பெறுமதி மற்றும் தண்டப் பணத்தைச் செலுத்தி முடித்த கொள்வனவாளர்கள்  247 பேருக்கு இந்த வீட்டுத் திட்டத்தின் வீட்டுரிமையை வழங்குதல் என்ற அடிப்படையில் இந்த வீடுகள் விடுவிக்கப்படும்.

உண்மையான உரிமையாளர் உயிருடன் இருக்கும் போது அவர் இந்த வீடு தொடர்பாக வங்கிக் கடன் பெறவில்லை என்றால், வீட்டின் உரிமையை நேரடியாக உரிமையாளரின் பிள்ளைகளுக்கு மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்திய நிதி அமைச்சர் வரவேற்ற ஜீவன்!

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நாம் 200’ நிகழ்வு நாளை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பையேற்று இந்நிகழ்வில் இந்திய அரசின் பிரதிநிதியாகவே இந்திய நிதி அமைச்சர் பங்கேற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க விலைமனுக் கோரல்!

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளன.  

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையைக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைவாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சு ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களைப் பயன்படுத்தி இந்த டெண்டர் அழைப்புப் பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பம்!

பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு  சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கணக்கெடுப்பு ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதலாவது கட்டிடமாக ஜனாதிபதி செயலகம் பட்டியலிடப்பட்டுள்ளது.

 இந்த ஆண்டு  குடிசன மதிப்பீட்டில் தரவு சேகரிப்புக்கு  அச்சிடப்பட்ட ஆவணங்களுடன் டெப்லெட் கணினிகள் பயன்படுத்துவது   விசேட அம்சமாகும்.

 இதேவேளை இறுதியாக சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு 2012 இல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

சினோபெக் எரிபொருள் விலையிலும் திருத்தம்!

இன்று முதல் அமுலாகும் வகையில்  சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை  356 ரூபாவாக குறைந்துள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல்3  ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை  423 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஒடோ டீசல் 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை  356 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சூப்பர் டீசல் 14  ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை  431 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.