திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இது தொடர்பான கோரிக்கையை மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகேவிடம் விடுத்திருந்தார்.

அந்த கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கும், அந்த நாளுக்குரிய கல்வி நடவடிக்கையை ஈடு செய்வதற்காக எதிர்வரும் சனிக்கிழமை (18) மத்திய மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளை நடத்துவதற்கும் ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமது கோரிக்கையை ஏற்று, தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான தீபாவளிக்கு விசேட விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்த ஆளுநருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

நிறைவேறிய ஊழல் எதிர்ப்பு திருத்த சட்டமூலம்

ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் கடந்த ஜூலை 19 ஆம் திகதி பாராளுமன்றக் குழு நிலை விவாதத்தின் போது நிறைவேற்றப்பட்டது.

அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதுடன் இந்த சட்டமூலம் ஜூலை 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என்ற காரணத்தினால் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (08) இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்து ஆட தீர்மானித்தது.

இன்று பகல் 2.00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகிறது.

நடப்பு உலகக் கிண்ண தொடரில் இங்கிலாந்து 10 ஆவது இடத்திலும் நெதர்லாந்து அணி 9 ஆவது இடத்திலும் உள்ளன.

இன்று (08) இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் இடையேயான போட்டி புனோவில் நடைபெற இருக்கிறது.

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபடும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

நுவரெலியாவில் அடையாள சின்னமாக 130 ஆண்டுகளுக்கும் மேலாக நுவரெலியா தபால் அலுவலகம் இருந்து வருகின்றது.

குறித்த தபால் அலுவலகத்தை ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக கைகளில் பதாகைகளை தாங்கியவாறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிராக செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

குறித்த தபால் நிலைய கட்டிடத்தை சுற்றி கருப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்திற்கு எதிரான வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில்பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், மற்றும்ஊவா மாகாணங்களில் சில இடங்களில்75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலைகாணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்                                                          

அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மட்டக்களப்பு – அடிக்கடி மழை பெய்யும்.

கொழும்பு -பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காலி – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

யாழ்ப்பாணம் – மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும்.

கண்டி – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

திருகோணமலை – மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும்.

மன்னார் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வெளிநாட்டவர்களுக்கு எந்தவொரு நிலமும் இனி விற்கப்படமாட்டாது

அரசாங்கம், ஷங்ரிலா ஹோட்டலை நிர்மாணிப்பதற்கு காலி முகத்திடல் நிலத்தை விற்பனை செய்ததன் பின்னர் எந்தவொரு நிலத்தையும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யாமல் இருப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மாணித்துள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஆரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இருந்தபோதிலும், அரசாங்க Nலைத்திட்டங்களுக்காக எந்த நிலமும் குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் என்று கூறிய அமைச்சர், பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், எந்த நேரத்திலும், புறக்கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பெந்தோட்டை, ஹிக்கடுவ, அனுராதபுரம் போன்ற எந்தவொரு புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலும் புகையிரத நகரம் ஒன்றை (Station Plaza) அமைக்க முதலீட்டாளர்கள் முன்மொழிந்தால், அந்தப் பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதியைப் பெற்று, அதனை மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் கையாள்வதற்காக குழுவொன்றை நியமிப்பேன் என தெரிவித்தார்.

அத்துடன், முதலீடுகளைப் பெறுவது மிகவும் முக்கியம் என சுட்டிக்காட்டிய அமைச்சர், நாட்டில் காணிகளை வைத்துக் கொண்டு அதனூடாக வருமானத்தை ஈட்டாவிட்டால், நாட்டின் பொருளாதாரப் பொறிமுறையை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்றும் அமைச்சர் மேலும் வினவினார்.

இன்றைய ராசிபலன் 08.11.2023

மேஷ ராசி அன்பர்களே!

அனைத்து விஷயங்களிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய மாதம். அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகே முடியும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து ஈடுபடவும். பணவரவு அதிகரிக்கும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும்.சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ் வீர்கள். ஆனால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு கவலை தரும். தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் அவருடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பழைய கடன்களைத் திருப்பிக் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். சிலருக்கு ஷேர் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசி அன்பர்களே!

குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர்களுக்குச் சென்று சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அவருடன் சுமுகமான உறவு ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வாகனத்தில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவைப்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாதப் பிற்பகுதியில் பெண்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். வழக்குகளில் பொறுமை அவசியம்.

கடக ராசி அன்பர்களே!

பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மனஉறுதி ஏற்படும். பழைய வாக னத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேரு வார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குடும் பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும். தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவு கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும். சகோதரர்களால் ஏற்பட்ட சங்கடங்களும் தொல்லைகளும் நீங்கும். சிலருக்கு எதிர் பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும். நீண்டநாள்களாகத் தடைப்பட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி பெறுவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் அனைத்தும் மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்க ளில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங் களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தையின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அவருடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். சிலருக்கு முக்கியப் பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும். கடன் கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

இந்த மாதம்அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப் பது நல்லது. குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டு மன அமைதியை பாதிக்கக்கூடும். கூடுமா னவரை மற்றவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும். ஆனால், புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிக ரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் முடிவதில் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் சற்று கவனமாக இருக்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கக்கூடும். கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்வது அவசியம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாகப் பழகவும்.

துலா ராசி அன்பர்களே!

அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவ தாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். ஆனாலும், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமா னவரை அளவோடு பேசவும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி அடைவீர்கள். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அலைச்சலும் அதிகப்படியான செலவுகளும் ஏற்படக்கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சுபச் செலவுகளும் அதிகரிக் கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக் கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்தி ருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக் கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமை யும். ஆனால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்கள் தலையிடு வதை அனுமதிக்க வேண்டாம். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் புண்ணியத் தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். வராது என்று நினைத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே!

வெளிவட்டாரத்தில் இழந்த மதிப்பும் மரியாதையும் திரும்பக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதா யம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். முயற்சிகள் சாதகமாக முடியும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தைவழி உறவுகள் மூலம் ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். கடன் தொல்லைகள் நீங்கும். சகோதரர்கள் மூலம் பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. இரவு நேரத்தில் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

மகர ராசி அன்பர்களே!

பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டா லும் பாதிப்பு எதுவும் இருக்காது. உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின் போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். வீட்டில் காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கக்கூடும். தந்தைவழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக் கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.

கும்ப ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறக்கூடும். சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உறவினர்களாலும் நண்பர்களாலும் நன்மைகள் ஏற்படக்கூடும். தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தந்தை வழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். என்றாலும், உரிய சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். குடும்பத்தில் முக்கியமான விஷயங்களில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் தர்ம சங்கடமான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர் பார்த்த காரியங்கள் முடிவதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களால் அனுகூலம் ஏற் படும் என்றாலும், சில பிரச்னைகளும் ஏற்படக் கூடும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன்வழியில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய கடன்களைத் தந்து முடித்து நிம்மதி அடைவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

மீன ராசி அன்பர்களே!

வாழ்க்கை வசதிகள் பெருகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்கக் காரியங்கள் தாமதமானாலும் நல்லபடி முடியும். எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. உறவினர்களாலும் நண்பர் களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளி மாநிலங்களில் உள்ள புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

முல்லைத்தீவில் கரையொதுங்கிய கஞ்சா பார்சல்

புதுமாத்தளன் கடற்கரையில் கஞ்சா பார்சலினை கைப்பற்றிய முல்லைத்தீவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுமாத்தளன் கடற்கரையில் பொதிகள் காணப்படுவதாக இன்று (07) காலை 6.30 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கடற்கரைக்கு சென்ற இராணுவத்தினர் கஞ்சா பொதிகளை கண்டிருந்தனர்.

இது தொடர்பாக இராணுவத்தினரால் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முல்லைத்தீவு பொலிஸார் குறித்த கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி கிடந்த தலா 22 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா பார்சல்களை கைப்பற்றினர்.

இதுவரை 11 கஞ்சா பார்சல் கைப்பற்றப்பட்ட நிலையில் கடற்கரை பகுதி முழுவதும் மேலும் பார்சல் ஒதுங்கியுள்ளதா என்று சோதனை செய்ததுடன் மீனவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகளின் பின்னர் கஞ்சா பொதிகளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தண்டவாளத்தில் முறிந்து விழுந்த மரம்

மருதானை மற்றும் பேஸ்லைன் புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பாதையில் மரம் ஒன்று வீழ்ந்துள்ளமையினால் களனிவெளி புகையிரத பாதையின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது

தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து!

8, 9, 10 ஆகிய மூன்று நாட்களில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தபால் மா அதிபர் ருவன் சத்குமார இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கண்டி மற்றும் நுவரெலியா தபால் நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை விற்பனை செய்யும் தீர்மானத்திற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.