யாழ் அக்காவல் விபரீத முடிவெடுத்த கனடா தங்கை!

  கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதான இளம் குடும்பப் பெண் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பெண்ணின் சகோதரியால் ஏமாற்றப்பட்ட நிலையில், அவர் இந்த விபரீத முடிவை மேற்கொண்டதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் அறியக்கிடைக்கையில்,

தங்கையின் பணத்தில் தனக்கு காணி வாங்கிய யாழ் அக்கா

தற்கொலைக்கு குடும்பப் பெண்ணின் மூத்த சகோதரி யாழ்ப்பாணத்தில் வசிக்கின்றார்.

இந்நிலையில் கடந்த வருட தொடக்கத்தில் யாழ் அரியாலைப் பகுதியில் உள்ள காணி ஒன்றை தனது பெயரில் கொள்வனவு செய்வதற்காக யாழில் உள்ள சகோதரியை நம்பி 1 லட்சத்து 35 ஆயிரம் கனடா டொலரை அனுப்பியுள்ளார்.

அந்த பணத்தை கனடாவில் உள்ள பலரிடம் கடன் பெற்றே அவர் வாங்கி அனுப்பியதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள சகோதரி காணியை தனது பெயரில் பதிவு செய்துவிட்டு கனடாவில் உள்ள சகோதரி மற்றும் அவரது கணவனின் பெயரில் போலியான உறுதியை தயாரித்து அனுப்பியதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் கடந்த மாதம் கனடா குடும்பப் பெண்ணின் கணவன் யாழ்ப்பாணத்துக்கு வந்து காணி தொடர்பாக ஆராய்ந்த போதே அந்தக் காணி தனது பெயரில் பதிவு செய்யாது தனது மனைவியின் சகோதரியின் பெயரில் பதிவு செய்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

யாழிற்கு வந்த தங்கையின் கணவருக்கு அதிர்ச்சி

அதன் பின்னர் பொலிசார் மற்றும் சட்டத்தரணிகளிடம் சென்றும் பலனில்லாது போனதையடுத்து கனடா சென்ற கணவர் மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது.

தனது சகோதரியுடன் தங்கை பேச்சுவார்த்தை நடாத்தியும் பலனில்லாது போனதை அடுத்தே தற்கொலைக்கு முயன்று அவர் காப்பாற்றப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

அதேவேளை புலம்பெயர் தேசங்களில் எமது உறவுகள் , கடும் பனியிலும் , நித்திரையின்றியும் சேமிக்கும் பணத்தில் தாயத்தில் தனகென ஓர் இடம்வேண்டும் என்பதற்காக தமது உறவுகளை நம்பி மோசம்போன சம்பங்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளது.

அத்துடன் ஏமாற்றப்பட்டவர்கள் இவ்வாரு விபரீத முடிவுகளுக்கு சென்ற சம்பவங்களும் யாழ்ப்பாதணத்தில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

O/L பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

 ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட தினத்தில் நடைபெறும் என தெரிவித்தார்.

“உயர்தரப் பரீட்சை தாமதமாகாது. பரீட்சை அட்டவணை அச்சிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தயாராக உள்ளனர்.  இரண்டு தரப்பினரும் மட்டுமே நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர். தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். உயர்தரப் பரீட்சை மூன்று மாதங்கள் தாமதமானால், மார்ச், ஏப்ரில்  திட்டமிடப்பட்ட சாதாரண தர பரீட்சை  மே, ஜூன் மாதங்களுக்கு சென்று விடும். மாணவர்களுக்கு 6 தவணைகள் வழங்க வேண்டி ஏற்படும். பாராளுமன்றத்தில் விளக்கினேன். சிலருக்கு புரியவில்லை. இருப்பினும், வழக்கமான அட்டவணையில் பாடத்திட்டத்தை உள்ளடக்குவது அடுத்த ஆண்டு முடிக்கப்படும். எவ்வாறாயினும், பரீட்சை கொஞ்சம் கொஞ்சமாக முன்னோக்கி எடுக்கப்படும்.

யாழில் பெண் கொலை மூவர் அதிரடி கைது!

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட 3 பேர் நெல்லியடி பொலிஸாரினால் நேற்றைய தினம் வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் – அல்வாய் பகுதியில் வீடொன்றில் இருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

 மூதாட்டி உயிரிழப்பில்  சந்தேகங்கள்

அல்வாய் கிழக்கை சேர்ந்த பழனிப்பிள்ளை தில்லைராணி (வயது 84) என்ற மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து, அவரது உடற்கூற்று பரிசோதனையின்போது சந்தேகங்கள் இருந்தமையால் , உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூதாட்டி படுகொலை செய்யப்பட்டே உயிரிழந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டது.

அதன் பின்னர், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார் 32 மற்றும் 28 வயதுடைய தம்பதியினரையும், மூதாட்டியின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்துவந்த 19 வயது யுவதியையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூதாட்டியின் காணிக்குள் இரண்டு வீடுகள் காணப்படுவதாகவும், ஒரு வீட்டினை தம்பதியினருக்கு வாடகைக்கு வழங்கிவிட்டு மற்றைய வீட்டில் மூதாட்டி வசித்து வந்துள்ளார்.

அத்துடன், மூதாட்டியை பராமரிப்பதற்காக 19 வயது யுவதி ஒருவர் அந்த வீட்டில் பணிப்பெண்ணாக தங்கியிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைதான மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

ஒரு மாதத்தில் 131 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்!

நாட்டில் கடந்த ஒக்டோபர் மாத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின்  பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.

இவர்களில் 10 பேர் தற்போது கர்ப்பமாக உள்ளதாக அவர் மே்லும் தெரிவித்தார்.

உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன் டொலர்!

இலங்கையின் நிதித்துறையின் பாதுகாப்பை பலப்படுத்த உலக வங்கி 150 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

உலக வங்கியின் நிறைவேற்று சபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

தனியார் துறையினருக்கு  20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு!

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறை, பெருந்தோட்டத்துறை மற்றும் அரை அரசு ஊழியர்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென தேசிய தொழிலாளர் சபை பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறான கொடுப்பனவு வழங்கப்படாவிடின் அதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க நேரிடும் என அனைத்து தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

“இந்த கோரிக்கைகளுக்கு செவி சாயுங்கள். இல்லை என்றால் 13 ஆம் திகதி பாராளுமன்றத்தின் முன் வருவோம். நாட்டில் உள்ள மற்ற தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயல்படுவோம்.”

இதேவேளை, இலங்கையில் மிகவும் ஆதரவற்றவர்களாக தோட்டத் தொழிலாளர்கள் உள்ளதாக இலங்கை பெருந்தோட்ட சேவைகள் சங்கத்தின் பிரதித் தலைவர்  எஸ்.சந்திரன் தெரிவித்தார்.

குறைந்தபட்ச கொடுப்பனவாக 2000 ரூபாவை வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, 20,000 ரூபா கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்சார் நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுக்குத் தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்வு இன்று (10) பத்தரமுல்லை செத்சிரிபாயவுக்கு முன்பாக வர்த்தக சங்கங்களின் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, தொழில் வல்லுனர்களின் பொறுமையை கோழைத்தனமாக கருதாமல் நியாயமற்ற வரிக் கொள்கையை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் வல்லுநர்களின் தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கம் மற்றும் நிதியமைச்சின் செயலாளருக்கு இடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு முக்கிய அறிவிப்பு சுகாதார பரிசோதகர்கள் என்ற பெயரில் மோசடி!

பொது சுகாதார பரிசோதகர்கள் என தெரிவித்து பல்வேறு மோசடி சம்பவங்கள் இடம்பெற்று வருவதால் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க பொருளாளர் ரொஷான் குமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, பணம் பறிக்கும்நோக்கில் தொலைபேசி அழைப்புகள் ஏதேனும் வந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க பொருளாளர் ரொஷான் குமார பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கஞ்சாவுடன் கைதான இளைஞன் கிளிநொச்சியில் நிகழ்ந்த சம்பவம்!

கஞ்சாவுடன் பயணித்த இளைஞன் ஒருவனை ஆனையிறவு வீதி சோதனை  நிலையத்தில் வைத்து இராணுவ புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கிளிநொச்சி ஆனையிறவு வீதி சோதனைச்சாவடியில் நேற்று வியாழக்கிழமை (9) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உடுத்துறை பகுதியில் இருந்து கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஆனையிறவு பகுதியில் வைத்து சோதனையிட்ட போது மோட்டார் சைக்கிளுடன்  390 கிராம் நிறையுடைய கஞ்சா போதைபொருளுடன் வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக பளை பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது. 

கடந்த சில நாட்களாக மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

வீழ்ச்சியடைந்த விலை

இதன்படி, சர்வதேச சந்தையில்,  WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.53 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

மேலும், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.1 அமெரிக்க டொலராக வீழ்ச்சி அடைந்துள்ளது.  

யாழ் போதை விருந்து தொடர்பில் பொலிசார் விசாரணை!

யாழ்ப்பாணத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற போதை விருந்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பை தளமாக கொண்டு செயற்படும் சமூக ஊடக அமைப்பினால் இந்த போதைப்பொருள் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சர்ச்சைக்குரிய போதை விருந்து 

இந்நிலையில் சமூக சீர்கேடான இந்த செயற்பாடு குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு யாழ்ப்பாணத்திலுள்ள பல சிவில் அமைப்புகள் கோரிக்கையை விடுத்துள்ளன.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மிகவும் இரகசியமாக நடைபெற்ற இந்த விருந்தில், ஒரு டிக்கட் 2000 ரூபாவிற்கும், ஜோடிகளாக கலந்து கொண்டால் நபருக்கு 1500 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது.

விருந்தில் பங்கேற்பவர்களுக்கு கழிவு விலையில் அறைகளும் ஏற்பாட்டாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சர்ச்சைக்குரிய போதை விருந்தில் சுமார் 54 தனி நபர்களும், 80 இளம் ஜோடிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

சீரழியும் யாழ்ப்பாண கலாசாரம் 

அன்றைய தினம் ஹோட்டலில் இருந்து 13 அறைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. விருந்துக்கு வந்தவர்கள் அதிக பெறுமதியான மதுபானம் மற்றும் ஹெரோயின், ஐஸ், கேரளா கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தியதாகவும் யாழ்ப்பாண சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் கலாசாரங்களை சீர்கெடுக்கும் வகையில் இவ்வாறான விருந்துகளை தென்னிலங்கை அமைப்புக்கள் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சமூகவிரோத விருந்துகளை நடத்துவதை தடுத்து நிறுத்துவதும் அவ்வாறான விருந்துகளை நடத்துபவர்களை கைது செய்வதும் பொலிஸாரின் பொறுப்பாகும் என அந்த அமைப்புக்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன.

அதற்கமைய, பொலிஸார் இந்த விருந்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.