அநுர அரசிற்கு சவால் விடும் நாடாளுமன்ற உறுப்பினர்!

சர்வதேச பிணைமுறியாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (06.12.2024) இடம்பெற்ற கணக்கு வாக்கு பணம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் “ஜனாதிபதி தமது கொள்கைப் பிரகடனத்தில் ‘சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டத்திலிருந்து விலகினால் பாரதூரமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

இதுவே உண்மை. இதனையே நாங்களும் ஆரம்பத்திலிருந்து கூறி வருகின்றோம். சர்வதேச நாணய நிதியத்தைத் தவிர்த்துச் செயற்பட முடியாது.

எனினும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில நிபந்தனைகள் மீள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.

தேசிய மக்கள் சக்தி தேர்தல் மேடைகளில் ஒன்றைக் கூறி விட்டு தற்போது நாடாளுமன்றத்துக்கு மற்றுமொரு விடயத்தைக் குறிப்பிடுகின்றது.

சர்வதேச பிணைமுறியாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் குறித்த உடன்படிக்கை இதுவரையில் கைச்சாத்திடப்படவில்லை.

டிசம்பர் மாதம் 12ஆம் திகதி வரை அதற்குக் கால அவகாசம் காணப்படுகின்றது. அவ்வாறு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்குமாயின் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு சவால் விடுக்கின்றோம்.

அரசாங்கத்துக்கு போதிய கால அவகாசம் காணப்படுகின்ற போதிலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

சர்வதேச பிணை முறிகளில் இருந்து பெறப்பட்ட கடனில் பெருமளவானவை மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

எனினும் அவ்வாறு இடம்பெறவில்லை. கணக்கிடல் பிரச்சினையே காணப்படுகின்றது. அவ்வாறு போலியான தகவலை முன்வைத்தே இந்த அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளது.

எனினும் மோசடியாளர்கள் மற்றும் ஊழல்வாதிகளைக் கைது செய்வதற்கும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராகவுள்ளது ” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

வானிலையில் ஏற்ப்பட்ட மாற்றம்!

கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக டிசம்பர் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனுடன், நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

தரமற்ற மருந்துகள் குறித்து விளக்கமளித்த அமைச்சரவை!

தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பினால் வழங்கப்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் நேற்று (06) தெரிவித்தார்.

தரமற்ற மருந்துகள் தொடர்பாக நேற்று முன்தினம் (05) செய்தித்தாள்களில் வெளியான செய்தி குறித்து எதிர்க்கட்சியின் பிரதான இணைப்பாளர் கயந்த கருணாதிலக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்;

” தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தான் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை ஊடாக விநியோகிக்கப்படுகின்றன.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் வினைத்திறனற்ற நிலை காணப்படுகின்றது. தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவுகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் அவ்வாறு கூறும் விதமாக தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பின் ஊடாக செல்லவில்லை. தரத்தின் தன்மை தொடர்பாக பிரச்சினை இருப்பின் அது அறிவிக்கப்படும்.

இது தொடர்பாக எதிர்காலத்தில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெளிவுபடுத்தினார்.

பாடசாலை மாணவர்களுக்கு அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு!

அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார்.

சீருடைகள்
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(06) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாடசாலை சீருடைக்கான துணிகளை வழங்கும்போது அதில் பெருமளவிலான துணிகள் வீணடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளை வழங்கும் தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது அதிர்ச்சியையூட்டும் பாபாவங்காவின் கணிப்பு!

2025 ஆம் ஆண்டில் உலகின் முக்கிய நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் என்று புகழ்பெற்ற ஜோதிடரான நாஸ்ட்ராடாமஸ், கணித்துள்ளார்.

அவரது எழுதி வைத்ததின்படி, இந்த மோதல் பரவலான அழிவுக்கு வழிவகுக்கும், இது உலகையே உலுக்கக்கூடும்.

ஜோதிடர் நாஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி,

உலகம் ஒரு பொருளாதார சரிவைச் சந்திக்கும், அது பேரழிவை ஏற்படுத்தும், இது பரவலான அமைதியின்மை மற்றும் சமூக எழுச்சிக்கு வழிவகுக்கும்.

குறித்த பொருளாதார சரிவின் தாக்கம், மெக்சிகோ, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் மிகவும் கடுமையானதாக இருக்கலாம்.

அங்கு பொருளாதார உறுதியற்ற தன்மை தற்போதுள்ள சவால்களை மேலும் மோசமாக்கும். பணவீக்கம், வர்த்தக பதட்டங்கள் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை அதிகரிக்கும் என்று கணித்துள்ளார்.

ஜோதிடர் நாஸ்டர்டாமஸ் போன்றே பல்கேரியாவை சேர்ந்த ஆன்மீகவாதி பாபா வாங்கா கணிப்புகளும் பெரும்பாலும் சரியாகவே இருந்துள்ளன.

ஆன்மீகவாதி பாபா வாங்கா கூற்றுப்படி,

2025 ஆம் ஆண்டில், மனித குலம் வேற்று கிரகவாசிகளைச் சந்திக்கும், வேற்றுகிரகவாசிகள் ஒரு உலகளாவிய நிகழ்வில் போது தங்களை வெளிக்காட்டுவார்கள்.

மேலும் டெலிபதி மூலம் தொடர்பு கொள்ளும் திறனை மனிதர்கள் பெறுவார்கள், மனித பரிணாம வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்கப்ப் பாய்ச்சல் ஏற்படும் என்று கணித்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் கைது!

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து ஒன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வீடொன்றில் திருட்டில் ஈடுபட்ட 20 வயது இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் கூரையை பிரித்து உட்புகுந்து நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஏழாலை தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்தவர்கள் வெளியில் சென்ற சமயம் , வீட்டின் கூரை ஓடுகளை அகற்றி, உட்புகுந்த திருடன் வீட்டில் இருந்த ஒன்பதே முக்கால் பவுண் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளான் சம்பவம் தொடர்பில் வீட்டாரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து ,விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அப்பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , திருடிய நகைகளை இளைஞனிடம் இருந்து மீட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து இளைஞனை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இன்றைய ராசிபலன்கள் 07.12.2024

மேஷம்

தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள்.பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீரகள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வாகன வசதி பெருகும்‌. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் கூடும் நாள்.

ரிஷபம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.

மிதுனம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கடகம்

சந்திராஷ்டமம் இருப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும்‌ வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

சிம்மம்

மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நன்மை கிட்டும் நாள்.

கன்னி

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவிசெய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிர்ஷ்டமானநாள்.

துலாம்

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும்‌. உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்

எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

மகரம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்‌. நிதானம் தேவைப்படும் நாள்.

மீனம்

குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. பொறுமை தேவைப்படும் நாள்.

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (06) நடைபெறவுள்ளன.
 
முதலாவது அரையிறுதி போட்டியில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளும், இரண்டாவது போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகளும் மோதவுள்ளன. 
 
இந்நிலையில் இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான அரையிறுதி போட்டி ஷார்ஜாவில் ஆரம்பமாகியது. 

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மற்றுமொரு அரையிறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் பந்து வீச்சை தெரிவு செய்துள்ளமை குறிப்பிட்டதக்கது.

14 வயது சிறுமி கொடூர கொலை!

14 வயது சிறுமி கொலை செய்து சடலத்தை நிர்மாணிக்கப்பட்டு வந்த கழிவறை குழியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி முதல் தனது 14 வயது மகள் காணாமல் போயுள்ளதாக கம்பஹா, அகரவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்று (5) இரவு கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

பின்னர் நடத்திய விசாரணையின் இந்தக் கொலைக்கான அடிப்படைக் காரணத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கொலையில் தனது இரண்டாவது கணவர் மீது சந்தேகம் இருப்பதாக சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய முறைப்பாட்டாளரின் இரண்டாவது கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, சந்தேகநபர் சிறுமியைக் கொன்று, நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டின் பின்புறமுள்ள கழிவறை குழியில் சடலத்தை வைத்து கொங்ரீட் பலகையால் மூடியதாகத் தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், கம்பஹா நீதவான் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளார்.

கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.