அரசியின் விலை தொடர்பில் ஜனாதிபதி முக்கிய அறிவித்தல்!

ஒரு கிலோ நாடு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இது தொடர்பில் அடுத்த 10 நாட்களுக்குள் அவதானமாகச் செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

நெல் கொள்வனவிற்காக வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுவதாகவும் அதனால் மக்களின் அரிசியை நுகரும் உரிமையில் கைவைக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதன்படி அரிசி விலைகள் பின்வருமாறு,

நாடு அரிசி 1 கிலோ மொத்த விலை 225 ரூபா – சில்லறை விலை 230 ரூபா
வெள்ளை அரிசி மொத்த விலை 215 ரூபா – சில்லறை விலை 220 ரூபா
இறக்குமதி செய்யப்படும் நாடு அரிசி 1 கிலோ 220 ரூபா
சம்பா அரிசி மொத்த விலை 235 ரூபா – சில்லறை விலை 240 ரூபா
கீறி சம்பா அரிசி மொத்த விலை 255 ரூபா – சில்லறை விலை 260 ரூபா

அதேபோல் நாளாந்தம் அரிசி ஆலைகளிலிருந்து வெளிவரும் அரிசியின் அளவினைக் கணக்கிடுமாறும் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்தார்.

அதே போன்று அரிசி தொடர்பான பிரச்சினைகளை அரசாங்கத்துடன் சுமூகமாக தீர்த்துக் கொள்ளுமாறும் அரிசி வர்த்தகர்களிடம் ஜனாதிபதி கோரினார்.

இலங்கை கடற்ப்படையினருக்கு உயர் பதவி!

இலங்கை கடற்படையின் 74 வது ஆண்டு நிறைவு விழா இன்று (09) பெருமையுடன் கொண்டாடப்படுகிறது.

இதேவேளை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரையின் பேரில் 2,138 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை அதிகாரிகளுக்கு இன்று முதல் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு!

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது குறித்து குழப்பமடையத் தேவையில்லை என குறித்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார்.

தற்போது இதை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் 4-5 வருடங்களாக வாகனம் இன்றி எங்களது துறை வீழ்ந்து கிடக்கிறது. நாங்களும் வாகனம் கொண்டு வர விரும்புகிறோம். இந்த ஆண்டு பஸ்கள் மற்றும் லொறிகள் கொண்டு வரப்படும் என்றும், அதன்பிறகு ஏனைய வாகனங்களையும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் கீழ் விரைவில் கொண்டு வர முடியும் என்றும் நம்புகிறோம். தற்போது எந்தவொரு வாகனத்தையும் கொண்டு வர அரசாங்கத்திற்கு தீர்மானம் இல்லை. புதிய அரசாங்கத்தின் இந்த முடிவு மாறுமா என்று கூற முடியாது. தங்களிடம் உள்ள வாகனத்தை விற்பனை செய்வது தொடர்பில் யாரும் குழப்பமடைய வேண்டாம். வாகனங்கள் எப்போது கொண்டுவரப்படும் என அரசாங்கம் இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை. இது குறித்து அரசாங்கம் அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். அரசு அறிவிக்கும் வரை யாரும் தங்கள் வாகனத்தை குறைந்த விலைக்கு விற்க விரும்பவில்லை.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகரக்கூடும்.

இதன்காரணமாக, அந்த கடற்பரப்புகளில் காற்று, மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது

அமைச்சர்களின் பங்களாக்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க கோரிக்கை!

அமைச்சர்களின் பங்களாக்களை தமது பாவனைக்காக வழங்குமாறு சுமார் 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் ஏழு வெவ்வேறு அமைப்புகள் அமைச்சர்களின் பங்களாக்களை வாடகைக்குக் கோரியுள்ளன.

மேலும், அமைச்சர்களின் பங்களாக்களை தங்கள் பயன்பாட்டிற்கு தருமாறு மூன்று நீதிபதிகளும் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, சுற்றுலாத்துறையை மேம்படுத்த அமைச்சர் பங்களாக்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என அமைச்சின் சில அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

சிறையில் தனது மனைவிக்கு நடந்த கொடுமைகளை கூறிய கணவன்!

யாழ்ப்பாண சிறையில் தனது மனைவி உதயகலாவுக்கு கொடுமைகள் நடப்பதாக தயாபராஜ் என்பவர் இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தயாபராஜ் உதயகலா தம்பதியினர் யுத்தம் முடிந்த பின்னர் பல்வேறு நிதிக்குற்றச்சாட்டுக்களிற்கு உள்ளாகியிருந்தனர்.

பின்னர் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தமிழகம் தப்பிச் சென்றனர். அங்கு ஓராண்டு சிறைவாசம் அனுபவித்த பின்னர், முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சமயத்தில், மீண்டும் சட்டவிரோத இலங்கைக்குள் நுழைந்திருந்தனர்.

பின்னர் சர்வமக்கள் கட்சியென்ற பெயரில் உதயகலா ஒரு அமைப்பை ஆரம்பித்திருந்தார். மேலும் தனது மனைவி மீது தகாத துஸ்பிரயோக முறைகளை சிறையில் நடத்தியுள்ள குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள்ளே சிறைச்சாலை ஆட்கள் இருக்கும் போதே சிறைச்சாலை அதிகாரிகளால் ஆடைக்களை கலட்ட வைத்து மானபங்கம் செய்துள்ளனர்

இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மனித உரிமை ஆனைக்குழுவில் முறைப்பாடு செய்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய ராசிபலன்கள் 09.12.2024

மேஷம்

கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துபோங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.சிறப்பான நாள்.

மிதுனம்

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் உற்சாகம் அடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்ஆவார்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

கடகம்

கணவன் – மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

சிம்மம்

சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

துலாம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

தனுசு

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். யோகா தியானத்தில் மனம் செல்லும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக்கிடைக்கும். உயர்வு பெறும் நாள்.

மகரம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கும்பம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

மீனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

யாழில் ஆவா குழுவின் தலைவன் கனடாவில் கைது!

யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஜந்தன் சுப்ரமணியம் என அழைக்கப்படும் பிரசன்ன நல்லலிங்கம் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2022ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இவர், இலங்கையிலும் பல கொலைகளுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சந்தேகநபரை கைது செய்ய இலங்கையின் பாதுகாப்புப் படையினர் சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற இவர், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கனடாவுக்கு வந்த போது கனேடிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான குறித்த இலங்கையர் மேலதிக விசாரணைகளுக்காக பிரான்ஸ் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கனேடிய பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

சாரதிகளுக்கு மது கொடுத்து கொள்ளை!

வாடகைக்கு பயணிப்பதாக தெரிவித்து, வாடகை வாகன சாரதிகளிடம் உள்ள தங்க நகைகளை சூட்சுமமான முறையில் கொள்ளையிட்டு வந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் நேற்று (08) கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் ஏறி சாரதிக்கு போதைப்பொருளை குடிக்கக் கொடுத்து இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் சுமார் 55 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்கப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும், அதிலிருந்து 41 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை செட்டியார் தெருவில் உள்ள தங்க விற்பனை நிலையத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் சுமார் 15 பொலிஸ் பிரிவுகளில் அடிக்கடி இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரபல நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய விஜயம் தொடர்பான முழுமையான அறிவிப்பு இந்த வாரம் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் நளிந்த குறிப்பிட்டுள்ளார்.

இவ் விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் கடற்றொழில், நீரியல்வளங்கள் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்ட முக்கிஸ்தர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழு பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.