பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட என்.சி என்ற போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் சந்தேகநபர் ஒருவர் (09.12.2024) கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சுகாதார அமைச்சினால் தடைசெய்யப்பட்ட என்.சி என்ற போதைப்பொருள் சிறிய பொதிகளில் பொதியிடப்பட்டு தோட்டங்களில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு பக்கட் 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் என்ற அடிப்படையில் விற்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பொகவந்தலாவ பிரிட்வேல் தோட்டத்தில் வசிப்பவர் எனவும் சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட போது வீட்டில் மிகவும் சூட்சபமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ½ கிலோகிராம் என்.சி போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கனடாவில் ஆயுதங்களுடன் கைதான தமிழ் தம்பதியினர்!

கனடாவில் ஆயுதங்களுடன் தமிழ் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவை சேர்ந்த இளம் தம்பதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரொறன்ரோவை சேர்ந்த 37 வயதான தனராஜ் தங்கராஜா மற்றும் 37 வயதான கிஷானி பாலச்சந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

37 வயதான கணவன் மீது மீது 8 குற்றச்சாட்டுகளும், மனைவி மீது 3 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3ஆம் திகதி மார்க்கம் வீதி மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ பகுதியில் பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை சோதனை செய்த போது தம்பதிகள் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நட்டரிசிக்கு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

🫵✍🏼இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

🫵✍🏼அதன்படி, பச்சை அரிசி ஒரு கிலோவின் விலை 210 ரூபாவாகவும் நாட்டரிசி ஒரு கிலோவின் விலை 220 ரூபாவாகவும் சம்பா அரிசி ஒரு கிலோவின் விலை 230 ரூபாவாகவும் நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையின் பிரபல திருடன் கைது !

🫵யாழ்ப்பாணம், கோப்பாய், அச்சுவேலி பிரதேசங்களில் நீண்டகாலமாக கலக்கிய திருடன் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவால் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபரை கைது செய்ய முற்பட்ட பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வயிற்றில் பலமாக கடித்து தப்பிக்க முயன்ற நிலையிலும் பொலிசாரின் துரித நடவடிக்கையின் காரணமாக றேகன் என்கின்ற இந்த நீண்டகால திருடன் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

✍🏼யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளில் திரிந்து , களவுகளில் ஈடுபட்ட சந்தேகநபர் , கொழும்பில் அதிசொகுசு வீடொன்றினை கொள்வனவு செய்துள்ள நிலையில் , 90 பவுண் நகைகளுடன் கைதாகியுள்ளார்.

✍🏼சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நாரந்தனை தெற்கு பகுதியை சொந்த இடமாகவும் புங்குடுதீவினை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் செபராசா தயானந்தன் ( றேகன் ) என்பவர் கடந்த இருபது வருடங்களாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா கொழும்பு போன்ற இடங்களில் திருட்டு, ஆயுமுனையில் கொள்ளை, ஆட்கடத்தல், பாலியல் வல்லுறவு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். 2019 ம் ஆண்டு வரை 32 பாரிய குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் காணப்படும் நிலையில் நீதிமன்றத்திலிருந்து தனது மூன்றாவது மனைவியின் துணையுடன் தப்பியோடிய இவர்
மலேசியா நாட்டிற்கு சென்று சில காலம் மதபோதகர் போன்று செயற்பட்டிருந்தார். பின்னர் மீண்டும் 2022 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு திரும்பி , கொழும்பு மாவட்டத்தின் புறநகரில் வீடொன்று கொள்வனவு செய்து மறைமுகமாக வசித்து வந்துள்ளார்.

✍🏼இந்நிலையில் கொழும்பிலிருந்து தனது மனைவியுடன் சொகுசு காரில் யாழ்ப்பாணம் வந்து , விடுதிகளில் தங்கி நின்று பகல் வேளைகளில் காரில் மனைவியுடன் சென்று வீடுகளை நோட்டமிட்ட பின்னர் , ஓரிரு வீடுகளை இலக்கு வைத்து , மாலை வேளைகளில் காரில் மனைவியுடன் சென்று, இலக்கு வைத்த வீட்டிற்கு அண்மித்த பகுதிகளில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை களவாடிய பின்னர் , அதிகாலை 1 மணிக்கும் – 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் துவிச்சக்கர வண்டியில் , சென்று வீட்டில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு கொள்வார்.

✍🏼திருட்டின் போது நகைகள் , பணம் என்பவற்றை மாத்திரமே திருடிக்கொள்வார். தொலைபேசி போன்ற இலத்திரனியல் பொருட்களை திருடுவதில்லை.

✍🏼திருட்டின் பின்னர் , அந்த வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் மீண்டும் சென்று சந்தேகம் இல்லாத பிறிதொரு இடத்திற்கு மனைவியை காரில் வருமாறு அழைத்து , துவிச்சக்கர வண்டியை அருகில் உள்ள பற்றைக்காடு ஒன்றிற்குள் வீசி விட்டு , காரில் தப்பி கொழும்பு பிரதேசத்திற்கு சென்று விடுவார்கள்.

✍🏼பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற பல்வேறு நபர்களின் முறைப்பாட்டின் பிரகாரம் , 300 பவுணுக்கும் அதிகமான நகைகள் மற்றும் பெருந் தொகை பணம் போன்றவற்றை இந்த நபர் திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

✍🏼பொலிசாரின் தீவிர விசாரணைகளை அடுத்து , சந்தேக நபர் கம்பஹா மாவட்டத்திலுள்ள வத்தளை நகரில் தனது மனைவியுடன் தலைமறைவாக வாழ்ந்து வருவது தெரிய வந்த நிலையில் யாழில் இருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட வேளை மனைவி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

✍🏼கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருடிய பணம், நகைகளை என்பனவற்றின் ஊடாக கொழும்பில் சொகுசு வீடு வாங்கிய பத்திரங்கள் , கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் , வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு உள்ளிட்டவற்றை மீட்டுள்ளனர்.

✍🏼அதேவேளை , திருட்டு நகைகளை கொழும்பில் அடகு வைத்த நபர்கள் மற்றும் நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான பிரதான சந்தேகநபரை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் அழைத்து வந்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

✍🏼அதேவேளை தப்பி சென்ற சந்தேகநபரின் மனைவியை கைது செய்யவும் பொலிஸார் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளனர். அத்துடன் இவர்கள் இருவரும் , நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனரா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

✍🏼பொலிஸ் விசாரணைகளில் சந்தேக நபர் , தனது மனைவியுடன் பிரான்ஸ் நாட்டுக்கு தப்பி செல்ல முகவர் ஒருவருக்கு பெருந்தொகை பணம் கொடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

✍🏼கைதுசெய்யப்பட்ட பிரபல திருடன் றேகன் என்கின்ற தயானந்தனின் தந்தையார் ஈபிடிபி கட்சியின் நீண்டகால உறுப்பினர் என்பதோடு யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் பொருளாளர் ஆவார். இந்த அமைப்பானது கடந்த ஆட்சியில் அப்போதைய கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 5பேர் கைது!

வவுனியா சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா சேமமடு இளமருதங்குளம் பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் (46) என்ற குடும்பஸ்தர் மரணமடைந்திருந்தார்.

குறித்த சமவமட தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஓமந்தைப் பொலிஸார் வாள்வெட்டில் ஈடுப்பட்டவர்கள் பயணித்த வாகனச் சாரதியை அன்றைய தினமே கைது செய்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸாரும், ஓமந்தை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வந்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா உக்குளாங்குளம், கூமாங்குளம், வேலங்குளம், ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 இளைஞர்களே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நீராடச் சென்ற வெளிநாட்டு தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மாத்தறை மிரிஸ்ஸ கடற்பரப்பில் நீரில் மூழ்கிய ரஷ்ய தம்பதியினர் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளனர்.

கடற்கரையில் கடமையாற்றிய பொலிஸ் உயிர் காக்கும் அதிகாரிகளால் தம்பதியினர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

40 வயது ஆணும் 38 வயது பெண்ணுமே இவ்வாறு மீட்கப்பட்ட ரஷ்ய தம்பதியர் ஆவர்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு!

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ். பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு  செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் நடந்து கொண்டமை தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாண வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து வைத்தியசாலையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டமை தொடர்பிலேயே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கு முன்னரும் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியராக கடமையாற்றும் போது மன்னார் வைத்தியசாலைக்குள் பிரவேசித்து வைத்தியசாலையின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் மன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததாக முன்னர் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, பொலிஸாரால் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடப்படுகின்றது.

மன்னார் வைத்தியசாலையில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் அர்ச்சுனா மன்னார் வைத்தியசாலைக்குள் பிரவேசித்து இடையூறு விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் தாய் மகளிடம் கொள்ளை !

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியிலுள்ள வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த தாயையும், மகளையும் தள்ளிவிழுத்தி, கையடக்க தொலைபேசி, பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன

குறித்த கொள்ளை சம்பவமானது இன்று (9) மாலை நடந்துள்ளது.

திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் யாழ்ப்பாணம் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த பகுதியல் முன்னர் பொலிஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானதை தொடர்ந்து, வீதியோர பொலிஸ் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டன.

பொலிஸ் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து சட்டவிரோத செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன.

அல்லைப்பிட்டி சோதனைச்சாவடி அகற்றப்பட்டதை தொடர்ந்து, இந்த பகுதியில் பெண்களிடம் அடிக்கடி வழிப்பறி நடந்து வருகிறது.

ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள், ஆனையிறவு சோதனைச்சாவடிகள் அகற்றப்படடதை தொடர்ந்து கால்நடை கடத்தல் தீவிரமடைந்துள்ளதாக பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ராசிபலன்10.12.2024

மேஷம்
மேஷராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. தந்தையின் நீண்டநாளைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்கள் உதவியுடன் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷபராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வெளியூர்ப் பயணத்தால் பணலாபம் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் தேவை அறிந்து உதவி செய்வார்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு.

மிதுனம்
மிதுனராசி அன்பர்களே!

தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தாய் வழியில் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். மற்றவர்களுடன் விவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர் களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளும் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

கடகம்
கடகராசி அன்பர்களே!

மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர் வருகையால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. அலுவலகத்தில் எதிர் பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.

சிம்மம்
சிம்மராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக அமையும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும்.

கன்னி
கன்னிராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர் களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவு கிடைக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

துலாம்
துலாராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. தாய் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும். சிலருக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவேண்டி வரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிரசித்தி பெற்ற ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்
விருச்சிகராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை உற்சாகம் தரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதுடன் செலவும் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணங்களால் உடல் அசதி ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும்.

தனுசு
தனுசுராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். சகோதர வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சி யான செலவாகவே இருக்கும். அதிகாரிகளின் ஆதரவில் காரிய அனுகூலம் உண்டாகும். அலுவல கத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரி களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகை ஆதாயம் தருவதாக இருக்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண்செலவுகளால் மனச் சஞ்சலம் ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மகரம்
மகரராசி அன்பர்களே!

சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். குடும்பம் தொடர்பான வேலைகளுக்காக பயணம் மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். தெய்வப் பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். அலுவலகத் தில் சக ஊழியர்களைப் பற்றி விமர்சிக்கவேண்டாம். பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியா பாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

கும்பம்
கும்பராசி அன்பர்களே!

மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் உண்டாகும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த் திக் கடனை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப் படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்க்கவும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

மீனம்
மீனராசி அன்பர்களே!

செலவுகள் அதிகரிக்கும் நாள். ஆனால், தேவையான பணம் கையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நவீன ரக ஆடைகளை வாங்கி மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத் தில் திடீர் செலவுகள் ஏற்படுவதால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சங்கடம் ஏற்பட்டு நீங்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

லொஹான் ரத்வத்தவிற்கு மீண்டும் பிணை!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு (Colombo) கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (09) முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்தியமை மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரத்வத்த கடந்த 6ஆம் திகதி கொள்ளுப்பிட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

லொஹான் ரத்வத்த தனது உறவினர் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது கொள்ளுப்பிட்டி சந்திக்கு அருகில் அவர் ஓட்டிச் சென்ற ஜீப் வாகனம், கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (07) முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

லொஹான் ரத்வத்த தனது உறவினர் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது கொள்ளுப்பிட்டி சந்திக்கு அருகில் அவர் ஓட்டிச் சென்ற ஜீப் மற்றுமொரு காருடன் மோதியதில் நேற்று (6) விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் லொஹான் ரத்வத்த மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தெரியவந்துள்ளது.

அதன்படி, மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த 05ம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.