தற்போதைய அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கும்!

இலங்கை ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வில் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் நாட்டிற்கு 300 மில்லியன் டொலர்கள் கிடைக்கும், இது நாட்டுக்கு மிகவும் நல்லது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி உரிய முறையில் நிர்வகித்து வருவதாகவும் அது சாதகமான அறிகுறி எனவும் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்

காற்றின் தரத்தில் ஆரோக்கியமற்ற நிலை!

நாட்டில் நேற்று இரவு 9 மணியளவில், நாடளாவிய ரீதியாக 12 நகரங்கள் மற்றும் பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.

அதற்கமைய இரத்தினபுரி, கிளிநொச்சி, கம்பஹா, திருகோணமலை, அம்பலாங்கொடை, தம்புள்ளை, காலி, நீர்கொழும்பு, புத்தளம், மஹியங்கனை, குருநாகல் மற்றும் கலாவெவ ஆகிய பிரதேசங்களிலேயே காற்றின் தரம் இவ்வாறு ஆரோக்கிமற்ற நிலையில் காணப்பட்டது.

காற்றின் தரக் குறியீட்டின்படி, 0-50 நல்லது, மற்றும் 51-100 மிதமானது. அத்தோடு, 101-150 இடையே சிறிது சாதகமற்றது என்பதோடு 151-200 என்பது மிகவும் சாதகமற்ற நிலைமையாகும்.

201-300 க்கு இடையே காற்றின் தரம் காணப்படுமாயின் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதோடு, அந்த எண்ணிக்கை 301-500ஆக காணப்படுமாயின் அது ஆபத்தானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலை காரணமாக உணர்திறன் உடையவர்கள் சுவாசிப்பதில் சிரமங்களை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லாஃப்ஸ் சமையல் எரிவாயு தொடர்பில் வெளியாகிய செய்தி!

இலங்கையில் தற்போது நிலவிவரும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க Wasantha Samarasinghe தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதத்தில் இருந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கவில்லை என எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டில் சில வாரங்களாக லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் நுகர்வோர் மற்றும் வரத்தகர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் உலகப் போர் தொடர்பில் வைரலாகும் கணிப்பு!

அவுஸ்திரேலியாவை (Australia) சேர்ந்த பிரபல பிஷப் மாரி இம்மானுவேல் (Bishop Mari Emmanuel), மூன்றாம் உலகப்போர் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் பிஷப் இம்மானுவேல் தனது எக்ஸ் தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளியில், “மூன்றாம் உலகப் போர் நடைபெற்றால் அதில் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இறந்து விடுவார்கள்.

அணு ஆயுதங்கள்
உயிர் பிழைத்தவர்களில் பெரும்பாலானோர் நாம் ஏன் பிறந்தோம் என்று கூறும் அளவுக்கு அவர்களுக்கு துயரங்கள் இருக்கும்.

அணு ஆயுதங்கள் வெறுமனே கண்காட்சிக்காக உருவாக்கப்படவில்லை டஅவை மனித வரலாற்றில் மிகவும் பேரழிவை தரும் ஆயுதங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், அமெரிக்காவின் (America) ஃபெடரல் எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் நிறுவனம், அணு ஆயுத தாக்குதல்களில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

பயங்கரமான கணிப்பு
இந்த சூழலில் பிஷப் மாரி இம்மானுவேல் வெளியிட்டுள்ள கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இப்படி ஒரு பயங்கரமான கணிப்பு கூறப்படுவது இது முதல் முறையல்ல காரணம் புகழ்பெற்ற துல்லியமான கணிப்புகளுக்கு பெயர் பெற்ற பாபா வங்கா (Baba Vanga) மற்றும் நோஸ்ட்ராடாமஸ் (Nostradamus) போன்ற புகழ்பெற்ற நபர்கள் பெரிய உலக நாடுகளின் மோதல்களையும் அவை கொண்டு வரும் அழிவையும் முன்னறிவித்துள்ளனர்.

மேலும், தற்போதைய உலகளாவிய பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்த கணிப்புகள் இப்போது இன்னும் அச்சத்தை ஏற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பிரதமரின் எளிமையான புகைப்படம்

இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய (harini amarasuriya)தனியாக பொருட் கொள்வனவிற்கு சென்றுள்ளார்.

சுப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு அவர் பொருள் கொள்வனவிற்கு எவ்வித பந்தாவும் இல்லாமல் செல்லும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

ஒரேயொரு பாதுகாவலர் மட்டும் அவருக்கு பின்னால் செல்வதுவும் அந்த புகைப்படத்தில் உள்ளது.

எளிமையான செயற்பாடு

முன்னைய அரசாங்கங்களின் அமைச்சர்களின் மனைவியர் மற்றும் உறவினர்கள் ஒரு கடைக்கு சென்றால் எத்தனை வாகனங்கள் மற்றும் எத்தனை பாதுகாவலர்கள் வரிசை கட்டி நிற்பார்கள். அந்த நிலையை மாற்றி இன்று பிரதமர் ஹரிணி அமரசூரிய எளிமையாக செல்வது அனைவராலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

இன்றைய ராசிபலன்கள் 01.12.2024

மேஷம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

ரிஷபம்

சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்‌. உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மிதுனம்

அரசால் அனுகூலம் உண்டு. மற்றவர்களால் பயனடை வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். உத்தியோகத்தில் உயரதி காரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கடகம்

உங்களை சுற்றியிருப் பவர்களின் சுயரூபம் தெரிய வரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

சிம்மம்

திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி

உடன்பிறந்தவர்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பா ர்கள்‌. அரசால் ஆதாயம் உண்டு. துணிச்சலாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். புது வாகனம் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.

துலாம்

கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். இனிமையான நாள்.

மகரம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். எண்ணங்கள் நிறைவேறும் நாள்.

கும்பம்

உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கடமையுணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதியவர்களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். புண்ணிய ஸ்தலம் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

நாட்டின் பல பகுதிகளுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை!

பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (30) மாலை 4.00 மணி முதல் நாளை மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை நிலை 2 – அவதானமாக இருக்கவும்

பதுளை மாவட்டம் – பண்டாரவளை, மீகஹகிவுல, பசறை மற்றும் ஹாலிஎல

கண்டி மாவட்டம் – உடுதும்பர, உடபலாத, தெல்தொட்ட, ககவட கோரளை, பாதஹேவாஹெட, ஹாரிஸ்பத்துவ, பாததும்பர, யட்டிநுவர, மெததும்பர, தொலுவ, உடுநுவர, தும்பனே, பூஜாபிட்டிய, பன்வில, பஸ்பாகே கோரளை, அக்குரணை, ஹதரலியத்த, கங்க இஹல கோரளை

கேகாலை மாவட்டம் – வரகாபொல, ரம்புக்கன, ருவன்வெல்ல, கலிகமுவ, புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, மாவனெல்ல, யட்டியந்தோட்டை

மாத்தளை மாவட்டம் – அம்பங்கக கோரளை, ரத்தோட்டை, உக்குவெல, வில்கமுவ, நாவுல, யடவத்த, பல்லேபொல, லக்கல பல்லேகம, மாத்தளை

நுவரெலியா மாவட்டம் – ஹகுரன்கெத்த, கொத்மலை, வலப்பனை

எச்சரிக்கை நிலை 1 – விழிப்புடன் இருக்கவும் (மஞ்சள்)

பதுளை மாவட்டம் – ஹல்துமுல்ல, எல்ல, லுனுகல, சொரனதொட்ட, கந்தகெட்டிய, ஊவா பரணகம, வெலிமட, அப்புத்தளை, பதுளை

கொழும்பு மாவட்டம் – சீதாவக்க

கம்பஹா மாவட்டம் – அத்தனகல்ல

கேகாலை மாவட்டம் – தெஹியோவிட்ட, தெரணியகலை, கேகாலை

குருநாகல் மாவட்டம் – ரிதிகம, மாவத்தகம

நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ, நுவரெலியா

இரத்தினபுரி மாவட்டம் – இம்புல்பே, எஹலியகொட, பலாங்கொடை

வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு

மகாவலி கங்கை ஆற்றுப்படுகை  மற்றும் தெதுரு ஓயா ஆற்றுப்படுகைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அப்பகுதி வழியாக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, ஹெடஓயாவை அண்மித்த பகுதிகளில் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை நீக்குவதற்கு நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மழைவீழ்ச்சி நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் ஆறுகளின் நீர் மட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருகின்றது.

இதன் காரணமாக வெள்ள நிலைமை ஏற்பட்டால், முன்னறிவிப்பு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

காட்டு யானையின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் மரணம்!

வவுனியாவில் காட்டு யானையின் தாக்குதலில் சிக்கி கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கடற்படை அதிகாரி பணி நிமித்தமாக கொழும்புக்கு சென்று விட்டு மீண்டும் முகாமிற்கு திரும்பிய வாகனத்தில் இருந்து இறங்கி முகாமிற்கு சென்று கொண்டிருந்த போது யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த அவரை, கடற்படையினர் மற்றும் உள்ளூர் மக்களும் இணைந்து வவுனியா பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றிய மத்தலான, நிட்டம்புவவில் வசிக்கும் கடற்படை வீரரான லெப்டினன்ட் தர அதிகாரியே யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனை வவுனியா பொது வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூனாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

வவுனியாவில் அதிர்ச்சி குடும்ப பெண் மரணம்!

வவுனியா பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் நேற்றிரவு (29-11-2024) 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெரியகுளம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்ப பெண் ஒருவர் இரவு வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரிந்த நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவத்தில் செட்டிகுளம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளம் குடும்ப பெண்ணே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.