மீண்டும் வானிலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழை இல்லாத வானிலை காணப்படும்.

வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கிலிருந்து தென்மேற்கு திசையில் வீசுவதுடன் காற்றின் வேகமானது  மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுவதுடன், புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகமானது  மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது  மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்பு அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் திருகோணமலை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.

புத்தளத்திலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலையின் உயரம் சுமார் 2.5 – 3.0 மீற்றர் வரை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் அந்த கடற்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், பின்னர் அந்த கடல் பகுதிகள் சிறிது நேரத்திற்கு மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றைய ராசிபலன்கள் 02.12.2024

மேஷம்

சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் இரண்டு மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அதற்காக அலுத்துக் கொள்ளாதீர்கள். அக்கம் – பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

ரிஷபம்

எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.

மிதுனம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்கள் வருகையால் வீடு களைக்கட்டும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஒங்கும். அமோகமான நாள்.

கடகம்

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

சிம்மம்

கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

துலாம்

கணவன் – மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகளை எடுப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். நீண்ட நாள் பிரச்னை தீரும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

விருச்சிகம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. உத்தியோகத்தில் பனிப்போர் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் அதிகாரியுடன் மோதல்கள் வந்து நீங்கும். நிதானம் தேவைப்படும் நாள்.

மகரம்

குடும்பத்தில் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். உற்சாகமான நாள்.

கும்பம்

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள்

கனடாவில் மருத்துவர் என்ற போர்வையில் சிகிச்சை வழங்கிய நபர் கைது!

கனடாவில் சத்திர சிகிச்சை நிபுணர் என்ற போர்வையில் சிகிச்சை வழங்கிய நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

29 வயதான ரொறன்ரோவைச் சேர்ந்த நபர் ஒருவரை இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாம் ஒரு சத்திர சிகிச்சை மருத்துவர் எனக் கூறி நான்கு பெண்களுக்கு அழகு சாதன சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.இந்த நான்கு பெண்களுக்கும் உடல் பாகங்களில் மாற்றங்களை செய்யும் நோக்கில் சிகிச்சை அளிப்பதாக குறித்த நபர் கூறியுள்ளார்.

அதற்காக குறித்த நபர் ஊசி மருந்தையும் இவர்கள் நால்வருக்கும் ஏற்றியுள்ளார்.

எனினும் குறித்த நபரின் சிகிச்சை முறையில் பெண்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இது குறித்து விசாரித்த போது குறித்த நபர் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு தகுதியுடையவர் அல்ல என்பது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்களில் சிக்கியவர்கள் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

யாழில் கைதான குடும்பஸ்தரிடம் கடும் விசாரணை!

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தரை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மாவீரர் நாட்களில் நடந்த சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை இணுவில் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய குடும்பஸ்தரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தரை யாழில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் சுமார் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து இன்றையதினம் (01-12-2024) யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் முற்படுத்தினர்.

அதனையடுத்து நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் (04-12-2024) ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிசார் விசேட நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் வீதி சமிக்ஞை விளக்கு அமைப்புகளைப் புதுப்பிக்கும் வரையில், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளைப் போக்குவரத்து பொலிஸார் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகள் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரையின் பேரில் முன்னெடுக்கப்படவுள்ளன.

கடந்த இரண்டு நாட்களாகப் பிரதான நகரங்களில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை விளக்குகளுக்கு ஏற்ப முன்னெடுக்கப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கையின்போது அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிக வாகன நெரிசல் நிலவும் காலப்பகுதிக்கு ஏற்றவாறு சமிக்ஞை விளக்கு அமைப்பு மாற்றியமைக்கப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, அவற்றைத் திருத்தியமைக்கும் வரையில் குறித்த விளக்குகளின் செயற்பாடுகளை இடைநிறுத்தி, வாகன போக்குவரத்து கட்டுப்பாட்டினை போக்குவரத்து பொலிஸாரைக் கொண்டு முன்னெடுக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரித்தானியாவிலிருந்து வந்த தமிழர் கைது !

பிரித்தானியாவிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணம் வசூலித்ததாக கூறப்படும் இலங்கைத் தமிழர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு (Colombo) நீதிவான் நீதிமன்றில் கொழும்பு வடக்கு குற்றப் பிரிவினரால் பெறப்பட்ட பயணத் தடை உத்தரவின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோதே விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 2009ஆம் ஆண்டு இலங்கையை விட்டு சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்ற கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.

குறித்த சந்தேக நபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கெஹலியவிற்கு எதிரான வழக்கு தொடர்பில் வாக்கு மூலம்!

நாட்டில் நிலவிய மருந்துப் பற்றாக்குறைக்கு மத்தியில் தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை கொள்வனவு செய்வதற்கு, அப்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் அமைச்சரவைப் பிரேரணைக்கு அனுமதி வழங்கியதாக முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் 13 பேர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்,மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையில் சாட்சியங்களை முன்வைத்த பிரதி மன்றாடியார் நாயகம் லக்மினி கிரிஹாகம இதனை குறிப்பிட்டுள்ளார்

குறிப்பிட்ட விசாரணை தொடர்பில், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இதுவரை 13 அமைச்சரவை அமைச்சர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும், பிரதி மன்றாடியார் நாயகம் தெரிவித்துள்ளார்.

ரம்புக்வெல்லவின் மீது நம்பிக்கை கொண்டே, நாட்டில் ஏற்பட்ட மோசமான நிலைமையை கருத்திற்கொண்டு, குறித்த மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கியதாக அமைச்சர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்திருந்தனர்.

மருந்து பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கத்தில், ரம்புக்வெல்ல பொய்யான தகவல்களை முன்வைக்கிறார் என்பதை அறிந்திருந்தால், அமைச்சரவைப் பத்திரத்தை தாங்கள் எதிர்த்திருப்போம் என அவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்திருந்தனர்.

13ஆம் திகதி வரை விளக்கமறியல்
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன, முன்னாள் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் திரான் அலஸ் ஆகியோரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையாக வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட பிரதி மன்றாடியார் நாயகம், முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர, வாக்குமூலம் வழங்குவதற்கு வேறொரு திகதியை கோரியுள்ளதாகவும் மன்றில் தெரிவித்துள்ளார்.

விடயங்களை கருத்திற்கொண்ட நீதவான் அபேவிக்ரம, முதலாவது சந்தேகநபரான சுதத் ஜானக பெர்னாண்டோவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் தற்போது பிணையில் உள்ள சகல சந்தேக நபர்களையும் பெப்ரவரி 21ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் வெளியான செய்தி!

2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய(Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை உடனடியாக நடத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களினால் எந்தவொரு நன்மையும் இல்லை.

இழக்கப்படும் வாய்ப்பு
ஏனெனில் குறித்த வேட்பு மனுக்கள் 2022 ஆம் ஆம் ஆண்டில் கோராப்பட்டவை. தற்போது 2 வருடங்கள் முற்றாக கடந்துள்ளது. எனவே பழைய வேட்பு மனுக்களின் ஊடாக உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் போது இளம் பிரதிநிதித்துவத்திற்கான வாய்ப்பு இழக்கப்படுகின்றது.

2023 தேர்தல் சட்டவிதிமுறைகளின் பிரகாரம் வேட்புமனுக்களில் 35 வயதுக்கு குறைந்த இளம்பிரதிநிதித்துவம் நூற்றுக்கு 25 வீதமாக காணப்பட வேண்டும் என்ற யோசனை திட்டம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் இந்த முறைமை பின்பற்றப்பட்டது. எனவே பழைய வேட்புமனு இரத்து செய்யப்பட்டு புதிய வேட்புமனு கோரப்பட்டு எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

காலாவதியான பல பொருட்கள் மீட்பு!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தகவல்களை மாற்றி சந்தையில் வெளியிடுவதற்கு தயார்படுத்தப்பட்டருந்த இறக்குமதி செய்யப்பட்ட கடலை, அரிசி மற்றும் காலாவதியான பேரீச்சம்பழம் களஞ்சியப்படுத்தப்பட்ட பல களஞ்சியசாலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை சுற்றிவளைத்துள்ளது.

ஆய்வு கூடங்களுக்கு விநியோகிப்பதற்கு தயாரிக்கப்பட்ட 50 லீற்றர் காலாவதியான இரசாயனப் பொருட்களையும் அந்த அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட காரியாலய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி களனி பெத்தியாகொட பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அதிகாரசபை இந்த பொருட்களை கண்டறிந்துள்ளது.

மேலும் கடந்த 28ஆம் திகதி வத்தளை பிரதேசத்தில் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகளால் பராமரிக்கப்படும் களஞ்சியசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, ​​காலாவதியான 4.6 தொன் காய்ந்த மிளகாய்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

காலாவதியான பொருட்களுடன் காலாவதியாகாத பொருட்களை சேமித்து வைப்பது நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், குற்றமாகும், என்பதால் அந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பண்டிகை காலத்தில் காலாவதியான பொருட்கள், தகவல் மாற்றப்பட்ட பொருட்களை சந்தைக்கு அனுப்பும் வர்த்தகர்கள் மற்றும் களஞ்சியசாலைக்காரர்களைக் கண்டறிய மேலதிக சோதனைகள் மற்றும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வழங்குனர்களால் அத்தகைய பொருட்களை வழங்கும் போது அவதானமாக இருக்கமாறும்,  அத்தகைய தகவல்கள் இருப்பின், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் குறுகிய தொலைபேசி இலக்கமான 1977 க்கு தகவல் வழங்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை கோரியுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்துக்கு அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (01) மாலை (02) 4.00 மணி முதல் நாளை மாலை 4.00 வரை இது செல்லுபடியாகும்.

எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள் (செம்மஞ்சள்)

1) கண்டி மாவட்டம்:

 உடுதும்பர
 உடபலாத
 டெல்தோட்ட
 கங்கவட்ட கோரல
 பாதஹேவாஹெட்ட
 ஹாரிபஸ்த்து
 பாததும்பர
 யட்டிநுவர
 மெததும்பர
 தொலுவ
 உடுநுவர
 தும்பனை
பூஜாபிட்டிய
 பன்வில
 பஸ்பாகே கோரல
 அக்குரணை
 ஹத்தலியத்த
கங்க இஹல கோரல

எச்சரிக்கை நிலை 1 – எச்சரிக்கையாக இருங்கள் (மஞ்சள்)

2) பதுளை மாவட்டம்:
 பதுளை
 பசறை
 ஹாலி-எல
 மீகஹகிவுல
 பண்டாரவளை

3) கேகாலை மாவட்டம்:
 கேகாலை
 ருவன்வெல்ல
 புலத்கொஹுபிட்டிய
 அரநாயக்க
 மாவனெல்ல
 யட்டியாந்தோட்டை

4) குருநாகல் மாவட்டம்:
 ரிதிகம

5) மாத்தளை மாவட்டம்:
 அம்பன்கங்க கோரல
 ரத்தோட்ட
 உகுவெல
 வில்கமுவ
 நாவுலா
 யடவத்த
பல்லேபொல
 லக்கல பல்லேகம
 மாத்தளை

6) நுவரெலியா மாவட்டம்:
 ஹகுரன்கெத்த
 கொத்மலை
 வலப்பனை