பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் சேட்டைக்கு இனி இடமில்லை

அனுமதி பெறாமல் உள்வந்தார் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

தன்னை சேர் என அழைக்கக் கூறினார் அழைக்க முடியாது என்றேன்.

என்னை பணிப்பாளர் பதவியில் இருந்து தூங்குவேன் என்றார் முடிந்தால் தூக்கிக் காட்டுங்கள் என்றேன்.

என்னை பாராளுமன்றம் அழைத்தது கேள்வி கேட்பேன் என்றார் கேளுங்கள் என்றேன்.

2200 சேவையாற்றும் யாழ் போதனா வைத்தியசாலை குழப்புவதற்கு இடமளிக்க முடியாது.

மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க வருவார் ஆயின் வாசலில் வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்.

பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முறையுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவிப்பு.

வடக்கில் கனமழை பெய்யும் வாய்ப்பு!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுவதுடன் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழக கடற்கரையை நெருங்க வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதி.

வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா,மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

வடமாகாண ஆளுநர் மற்றும் பிரிட்டன் தூதுவரிடையே சந்திப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயன் அவர்கள், பிரிட்டன் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகளுக்கான முதனிலைச் செயலர் ஹென்றி டொனைட் அவர்களுக்கும் இடையேயான சந்திப்பு நேற்று (10.12.2024) காலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநாராக நியமிக்கப்பட்டமைக்கு முதலில் வாழ்த்துக்களைத் தெரிவித்த முதனிலைச் செயலர், வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவதே தனது பயணத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில், இந்த புதிய அரசாங்கத்தின் காலத்தில் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என வடக்கு மாகபண ஆளுநர், ஹென்றி டொனைட்டிடம் தெரிவித்ததோடு,

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரிடமிடந்து இன்னமும் காணிகள் விடுவிடுக்கப்பட வேண்டும் எனவும், குறிப்பாக மக்களின் காணிகள் கடந்த காலங்களில் அவர்கள் இடம்பெயர்ந்திருந்த சந்தர்ப்பங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிர்கள் பிரிசுரிக்கப்பட்டமையால் தற்போது சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அரச நிறுவனங்களின் சொத்துக்களை பொதுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி!

அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்களாக்கள் ஜனாதிபதி மாளிகைகள் என்பவற்றை பொருளாதார ரீதியாகப் பயனுள்ளதாகப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்களாக்கள், விசும்பாய மற்றும் பல்வேறு பிரதேசங்களில் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் என்பவற்றை பொருளாதார ரீதியாகப் பயனுள்ளதாகப் பயன்படுத்துவதற்கு பொருத்தமான வழிமுறையை முன்மொழிவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொதுநிர்வாக மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் ஆகியோர் முன்வைத்த ஒருங்கிணைந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி அரச நிர்வாக,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் கீழ் கொழும்பு 07 மற்றும் 05 பகுதிகளில் காணப்படும் 50 அரச பங்களாக்கல் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தினால் நிர்வாகிக்கப்படும் கொழும்பு, கண்டி, நுவரெலியா, மஹியங்கனை, அநுராதபுரம், கதிர்காமம், யாழ்ப்பாணம்,எம்பிலிபிட்டிய, மற்றும் பெந்தோட்ட ஆகிய பகுதிகளில் ஜனாதிபதி மாளிகைகளும் அமைந்துள்ளன.

அவற்றில் அடிக்கடி பயன்படுத்தப்படும் கண்டி, கொழும்பு ஜனாதிபதி மாளிகைகள் தவிர்ந்த ஏனைய மாளிகைகளும், தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் காணப்படும் பல நாட்டின் தலைவர்கள் பலரும் உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்திய கொழும்பு 02 இல் உள்ள விசும்பாய,

பிரதமர் அலுவலகத்தின் கீழ் காணப்படும் நுவரெலியாவிலுள்ள பிரதமருக்கான உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் மேற்குறிப்பிடப்பட்ட அரச பங்களாக்கல் என்பன இவ்வாறு பொருளாதார ரீதியில் பயனுள்ளவையாக மாற்றப்படவுள்ளன.

இந்த அரசு சொத்துக்களைப் பராமரிப்பதற்காக பெருமளவு நிதி செலவழிக்கப்பட்டுள்ள போதும் அவற்றினால் குறைவான பலனே ஈட்டப்படுகின்றன.

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் அமைச்சரவை வெளியிட்டுள்ள செய்தி!

தற்போதைய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது.

தரவுகளை எளிதாக்கும் புதிய தொழில்நுட்பத்தின்படி, தற்போது உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான பொருத்தத்தை அரசாங்கம் அங்கீகரிக்கும்.

இதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கருத்திற்கொண்டு, இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இன்றைய ராசிபலன்கள் 11.12.2024

மேஷம்

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். திடீர் பயண செலவுகளால் திணறுவீர்கள் பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்.வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்

எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்‌. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள்‌. உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.

கடகம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். உற்சாகமான நாள்.

சிம்மம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சில வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக முடியும். நிதானம் தேவைப்படும் நாள்.

கன்னி

உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடிவரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்

எதிர்பாராத பணவரவு கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான ‌திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

தனுசு

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை கிடைக்கும்‌. மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்கத்தில் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திவரும்‌. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சில அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

கும்பம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம்கைக்கு வரும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

மீனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

பிரான்சில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை

 பிரான்ஸ் – பாரிஸின் புறநகர் பகுதியில் கடந்தவாரம் 29 வயதான  இலங்கை  தமிழர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (06) முதுகில் சுடப்பட்டுகொல்லப்பட்ட 29 வயதான  இளஞனின்  கொலைக்குரிய காரணங்கள் தெளிவாக தெரியவில்லை என பிரான்ஸ்  பொலிஸார் தெரிவித்துள்ளதாக  கூறப்படுகின்றது.  உயிரிழந்த  தமிழ் இளைஞன் இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர்   தனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், நண்பர் அங்கிருந்து அகன்றபோது நிலையில்  இளைஞன்  சுடப்பட்டதாகவும்  பொலிஸ்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து  , உடனடியாக அந்த இடத்துக்குசென்ற அவசரகால சேவை பிரிவு பணியாளர்கள் தரையில் குற்றுயிராக கிடந்த  இளைஞனுக்கு   முதலுதவிகளை செய்த போதிலும் அந்த முயற்சிகள் பலனளிக்காமல் சிறிது நேரத்தில் அவர் மரணடைந்துள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது.இந்த நிலையில், கொல்லப்பட்ட  இளைஞன்  வாடகை வண்டி ஓட்டுநனராக பணியாற்றியதாவும் தெரிவிக்கப்படுகிறது.

 மேலும்  கொலைக்கான காணம் வெளியாகாத நிலையில்  மேலதிக  விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாக  அந்த  தகவல்கள்  மேலும்  தெரிவிக்கின்றன.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான 2024 (2025) விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்(Department of Examinations) தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று(10) நள்ளிரவு 12 மணி வரை தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2024 (2025)இற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நவம்பர் (05) முதல் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் முன்னர் அறிவித்திருந்தது.

பின்னர், நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு டிசம்பர் 10ஆம் திகதி வரை விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் விளக்கமளித்துள்ள பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர,

பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் இன்றைய தினத்திற்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் எக்காரணம் கொண்டும் இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பங்களை ஏற்க வாய்ப்பில்லை.

எனவே, இந்தப் பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் எவரும் நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் நிகழ்நிலையில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நான் உறுதியாக வலியுறுத்துகிறேன்.

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க நடவடிக்கை!

வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை 63ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக அமைச்சக செயலாளர் அலோக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஓய்வு பெறும் வயது
இதற்கமைய, தற்போது 62ஆக காணப்படும் வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63ஆக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மகாவலி ஆற்றில் மீட்க்கப்பட்ட சடலம்!

மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சடலம் ஒன்று இன்று (10.12.2024) மீட்கப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் மல்லந்த பாலத்தின் கீழ் மகாவலி ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நாவலப்பிட்டி பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

40-45 வயது மதிக்கதக்க இனந்தெரியாத நபரின் சடலம் தொடர்பில் நாவலப்பிட்டி நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.